நிலப்பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இன்று (நவம்பர் 17), சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 2003ஆம் ஆண்டு முதல் (கமல் நாத் தலைமையிலான ஒன்றரை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி நீங்கலாக) இதுவரை பாஜகதான் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. 2018 தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக ஆட்சிமீது நிறையவே அதிருப்தி நிலவுவதாகக் கள நிலவரங்கள் சொல்கின்றன. அதேவேளையில், அது காங்கிரஸ் ஆதரவு அலையாகவும் மாறிவிடவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். எனில், இந்தத் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும்?
கணக்குத் தீர்க்கத் துடிக்கும் காங்கிரஸ்: 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில், ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை. 2018 தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றதுடன், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிட்டது. பாஜகவுக்கு 109 இடங்கள் கிடைத்தன. எனினும், ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ அமைக்கத் துடித்துக்கொண்டிருந்த பாஜக, சரியான தருணத்துக்காகக் காத்திருந்தது. காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா முதலமைச்சர் பதவி தனக்குக் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago