எதிர்வினை: அம்பேத்கர் கண்ட பெளத்த ‘மதம்’

By அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர்

பாபாசாகேப் அம்பேத்கர் தனது மக்களோடு பெளத்தம் தழுவியதைப் பற்றி ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் எழுதிய ‘அறியப்படாத அக்டோபர் புரட்சி!’ (அக்.17) கட்டுரையைப் படித்தேன். இவ்வரலாற்று நிகழ்வினை ‘அறவழியில்’ நடைபெற்ற சமூக – பண்பாட்டுப் புரட்சி என்று கட்டுரையாளரே தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும் பெளத்தம் என்பது அறநெறி அல்லது கொள்கையே எனவும், அம்பேத்கரின் வரையறையின்படி, மரபார்ந்த பொருளில் பெளத்தம் ஒரு மதமாகாது எனவும் கட்டுரையாளர் எழுதியிருப்பதை, பெளத்தத்தை ஏற்ற பட்டியல் சாதியினர் மறுக்கவே செய்வர்.

பெரியாரின் எழுத்துக்கள் வாயிலாக பெளத்தத்தைப் புரிந்துகொண்டால் அது ஒரு மதமல்ல. ஆனால், அம்பேத்கர் வழியில் மதமாற்றம் அடைந்தவர்கள் பெளத்தத்தை அறம் சார்ந்த வாழ்வியலாக மட்டுமே உள்வாங்கிக்கொள்ளவில்லை. பெளத்தத்தை மதமாகப் பின்பற்ற அவர்களது பகுத்தறிவு ஒரு தடையாகவும் இருந்ததில்லை. அதற்குக் காரணம் அம்பேத்கரின் எழுத்துக்களே எனலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE