யார் பொறுப்பில் ஊராட்சிச் செயலாளர்கள்?

By நந்தகுமார் சிவா

கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கிராமசபைக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், பிள்ளையார்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த முதியவரை ஊராட்சிச் செயலாளர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்தது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஊராட்சிச் செயலாளருக்கு முன்ஜாமீனும் கிடைத்துவிட்டது. பிள்ளையார்குளம் ஊராட்சியோ, கிராம சபையோ அவர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுதான் இன்று நம் ஊராட்சிகளின் நிலை.

அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம்: ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தின் அலுவலகப் பணியை மேற்கொள்வதற்காக ஊராட்சியின் வங்கிக் கணக்கிலிருந்து ஊதியம் பெறும் முக்கியப் பணியாளர்கள் நம் ஊராட்சிச் செயலாளர்கள். புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம்தொட்டு, அதாவது, 1996ஆம் ஆண்டு முதல் செயலாளர்களை நியமிக்கும் பொறுப்பும், அவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்திடமே இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE