அஞ்சலி: கே.ஜி.ஜோர்ஜ் (1946-2023) | சினிமா கலைஞர்களின் இயக்குநர்!

By மண்குதிரை

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் ‘சினிமா கம்பம்’ சிறுகதை, கெ.ஜி.ஜோர்ஜின் ‘உள்கடல்’ படத்தைப் பற்றியதுதான். அதில் ஒரு பாடல் (ஷரபிந்து மலர்தீப...). ஷோபாவும் வேணு நாகவள்ளியும் ஒரு வீட்டின் மாடியிலிருந்து பாடும் அழகான காதல் காட்சி. அதற்குப் பின்னால் ஒரு ஃபாஸ்ட் பேசஞ்சர் பேருந்து அவுட் ஆஃப் போகஸில் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துசெல்லும். ‘காதலின் பெரும் வேதனையோடு அந்தப் பேருந்தில் நான் இருந்தேன்’ எனக் கதையில் சக்கரியா சொல்கிறார். சந்தோஷமான காதலுக்குப் பின்னால் ஒரு துக்கம் பேருந்தில் கடக்கிறது. பாடல் காட்சியில் வேணுவின் மூக்கு ஷோபாவின் நெற்றியில் உரசும். இருவரும் கண் மூடிக் கொள்கிறார்கள். காதலின் உன்மத்தம் அது. மீண்டும் மாடியறைக்கு வெளியே வருகிறார்கள். இன்பம் பொங்கும் பிரகாசமான சூரிய வெளிச்சம் அங்கு வீசுகிறது. ஜோர்ஜ் இந்தப் பாட்டைப் படமாக்கியிருக்கும் விதத்தைக் கதையில் சக்கரியா திருத்தமாக விவரித்திருப்பார். காதல் உணர்வுகளை மொக்கு அவிழ்வதைப் போல் மெல்லமெல்ல விவரிக்கும் சினிமா மொழி அது. அதுதான் தனி மனித உணர்வைப் பொதுவாக்குகிறது; சக்கரியாவின் கதைக்குள்ளும் ஓர் இடத்தைப் பெற்றுத் தருகிறது. ஜோர்ஜ் வாங்கிக் குவித்த விருதுகளுக்கெல்லாம் மேலானது இது. ஜோர்ஜ் என்கிற சினிமா கலையின் விற்பன்னரை நமக்கு அடையாளம் காண்பிப்பதும் இந்தத் தன்மைதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE