சென்னை: சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு தூய்மையான காற்றை வழங்குவது அரசின் கடமையாகும்.
மணலியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் சுமார் 635 நாட்களில் மேற்கொண்ட ஆய்வில் 418 நாட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாசுவை வெளியிட்டு இருப்
பது உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான தரவுகளின்படி, சென்னையில் பொது போக்குவரத்து உள்ளிட்டபோக்குவரத்துக்காக 2 லட்சத்து 3,797 வாகனங்கள், சொந்த பயன்பாடு மற்றும் போக்குவரத்து அல்லாத 48 லட்சத்து 23,996 வாகனங்கள் என மொத்தம் 50 லட்சத்து 27,793 வாகனங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 39 லட்சத்து 36,392 இருசக்கர வாகனங்கள், 8 லட்சத்து 52,080 கார்களும் அடங்கும்.
இந்த வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது பறக்கும் புழுதியாலும், அவை வெளியிடும் புகை, முறையாக பராமரிக்காத வாகனங்களில் இருந்து வெளியேறும் அடர் புகை போன்றவற்றால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. உண்மையில் சென்னை மாநகரப் பகுதியில் சாலைகளை முறையாக பராமரிக்காதது, வாகன புகை, தொழிற்சாலைகளை கண்காணிக்காததால் வெளியேறும் புகை போன்றவற்றால் மிகை காற்று மாசு நிலவுகிறது.
கடல் காற்று வீசுவதால் அவை சிதைவடைந்துவிடுகின்றன. சில நேரங்களில் மோசமான வானிலையால், கடல் காற்று வீசுவது தடைபடும்போது மாநகர மாசுவின் உண்மை முகம் தெரியவருகிறது. அவ்வாறு கடந்த 2018-ம் ஆண்டு மற்றும் கடந்த 2020-ம் ஆண்டுகளில் ஒருசில தினங்கள் கடல் காற்று வீசாததால் மிகை மாசு பதிவாகியுள்ளது.
» தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் - பழவேற்காடு கடற்கரையில் ஒத்திகை நிகழ்ச்சி
இது போன்ற காற்று மாசுவை குறைக்க மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீத நிலப்பரப்பு பசுமை போர்வையுடன் இருக்க வேண்டும். அப்படியெனில், 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், 33.3 சதவீத பரப்பான 144 சதுர கிமீ பரப்பளவுக்கு பசுமை போர்வை இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட வன கணக்கெடுப்பு அறிக்கையில் சென்னையில் 22.70 சதுர கிமீ (5.28 சதவீதம்)அளவே பசுமை போர்வை உள்ளது என குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானதாகும்.
இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் சென்னை மாநகரில் பசுமை போர்வை கடந்த 2011-ம் ஆண்டை விட, 2021-ம் ஆண்டில் 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மாநகரின் பசுமை பரப்பு 18 சதுர கிமீ ஆக இருந்துள்ளது. இது மாநகராட்சியின் நடவடிக்கையாலேயே சாத்தியமாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் பங்களிப்புடன் சாலையோரங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு, ஏராளமான நிழற்சாலைகளை உருவாகியது. அவற்றில் தற்போது வானுயர மரங்கள் வளர்ந்து சாலை முழுவதும் நிழல் தந்துக் கொண்டிருக்கின்றன.
அதற்கு வடசென்னையில் மகாகவி பாரதி நகரில் உள்ள மத்திய நிழற்சாலை சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த சாலை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போதும் பசுமை போர்வையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி நிழற்சாலைகளை அதிகரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் இடைப்பட்ட காலத்தில் எங்கும் நிழற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. புதிய மரக்கன்றுகளை நடாததால் நிழற்சாலைகள், வெயில் சாலைகளாக மாறி வருகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் 835 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 2021 -2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் 176 பூங்காக்கள் புதிதாக அமைக்க திட்டமிட்டு, 97 பூங்காப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 79 பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்படும் திறந்தவெளி நிலங்களை பூங்காக்களாக மாற்றி, அவற்றில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறோம். மேலும் 19 புதிய பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகரை பசுமையாக்கி அழகுபடுத்த குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து 2021 -ம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்து 86,327 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து தட சாலைகள், 5 ஆயிரத்து 270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் சாலையோரங்கள் மற்றும் சாலை மையத் தடுப்புகளில் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
59 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago