உலுக்கும் படமும் உறைந்துவிட்ட வேதனைகளும்

By எஸ்.வி.வேணுகோபாலன்

என் தாயை நான் பறிகொடுத்தது என் இரண்டரை வயதில். அடுத்த பிரசவத்தில் ஜன்னி கண்டு என் தாயும் அவர் சேயும் மரித்துப் போயிருந்தனர். உரிய மருத்துவ உதவிகிடைக்கத் தாமதமானதுதான் என் தாயின் மரணத்துக்கு முக்கியக் காரணம் என்று இளவயதில்கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மாவைப் பெற்ற பாட்டியைத்தான், அம்மா என்று அவர் இறக்கும்வரையில் நானும் எனக்கு முன் பிறந்த இருவரும் அழைத்துக் கொண்டிருந்தோம்.

இராப் பொழுதுகளில் தனது மடியில் எங்களை உறங்கப்போட்டுக்கொண்டு கதைகள் சொல்கையில், அம்மா என்று அழைத்துவிட்டால் அவரால் தனது உள்ளம் நொறுங்குவதைத் தற்காத்துக்கொள்ள இயலாது. தனது மூத்த மகளைப் பறிகொடுத்த அவரது கண்ணீரும், கண்ணீர் வற்றிய வெற்றுப் பார்வைகளும், பெருமூச்சும் இன்னும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. அப்படியான ஒரு தாயின் முகத்தை அண்மையில் ஒரு புகைப்படத்தில் பார்த்ததில் இருந்து உள்ளம் படும்பாடு சொல்லி மாளாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE