ம
துரையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவரும் முருகன், குடியுரிமைப் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பின் தமிழகப் பொறுப்பாளராகச் செயல்படுபவர். கடந்த ஆண்டு கரூர் உளவுப் பிரிவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட கலா, சந்திரா என்ற இரண்டு நக்சல்பாரி செயல்பாட்டாளர்களுக்காக அவர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்து வாதாடிவந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 8 அன்று வழக்கறிஞர் முருகன் வீட்டைச் சோதனை செய்த போலீஸார், மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர் என்று கூறி அவரைக் கைதுசெய்தனர். எந்த வழக்கில் அவர் வழக்கறிஞராக வாதாடிவந்தாரோ அதே வழக்கில் அவரும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். முருகன் தங்கள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கலாவும் சந்திராவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. ஒரு வழக்கறிஞர், தனது கட்சிக்காரருடன் உரையாடும் உரையாடல் என்பது அந்த வழக்கறிஞருக்கும் அவரின் கட்சிக்காரருக்குமான அந்தரங்க உரை என்றே வகைப்படுத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் அதை ஒரு சாட்சியமாக சாட்சியச் சட்டம் ஏற்பதில்லை. 1992-ல் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலருக்காக வாதாடிய டி.வீரசேகரன் என்ற வழக்கறிஞர் இதேபோல் கைதுசெய்யப்பட்டபோது ‘ஒரு வழக்கறிஞருக்கும் அவரின் கட்சிக் காரருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட உரையாடல் (சாட்சி யச் சட்டத்தில் 129 பிரிவு) குற்றமாகாது’ என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலைசெய்தது. ஆனால், முருகன் விஷயத்தில் இதெல்லாம் கண்டுகொள்ளப்படவில்லை.
இதேபோல், கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர்கள் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர்கள் சார்பில் வாதாடிவரும் இராசரத்தினம் (எ) செம்மணி யும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ‘ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான வன்கொடுமை வழக்குகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள் கடமையை தவறியவர்கள்; குற்றவாளிகள்’ என சட்டம் கருதுகிறது. அந்த அடிப்படையில் கீழமை நீதிமன்றத்தில் அப்பகுதி காவல் ஆய்வாளரையும் துணைக் காவல் கண்காணிப்பாளரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி ஒரு மனுவைக் கடந்த 3.11.2017 அன்று நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார் செம்மணி. அன்றைய இரவே பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் நள்ளிரவில் அவரது வீடு புகுந்து கைதுசெய்து இழுத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி சட்டரீதியான நடைமுறைகளை மேற்கொள்ளும் வழக்கறிஞர்களுக்கே இந்தக் கதி என்றால், பாமர மக்கள் எத்தனை அபாயகரமான சூழலில் இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதே குற்றம் என்று பார்க்கப்படும் சூழல் நிலவுகிறது. அச்சுறுத்தும் வகையில் வீடுபுகுந்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதிகாரவர்க்கத்தினரின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள், சமூகச் செயல்பாட்டாளர்களை முடக்கும் செயல்களை அரசு எப்போது நிறுத்தப்போகிறது? எளியவர்களின் குரல்களை எதிரொலிக்கும் குரல்களை மெளனமாக்குவது எப்போதுதான் முடிவுக்கு வரும்?
- ச.பாலமுருகன்,
‘சோளகர் தொட்டி’ நாவல் ஆசிரியர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago