ஆயுதங்கள் கிடைக்கக் கூடாது

லெபனானில் உள்ள கிறிஸ்தவ வழி பாட்டுத் தலங்கள் தாக்கப்படும் என்று கடந்த வியாழக்கிழமை ஒரு பயங்கரவாத அமைப்பு எச்சரித்துள்ளதை அதிகாரிகள் லட்சியமே செய்யவில்லை! ‘பால் பெக்கின் சுதந்திர சன்னி பிரிகேட்' என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் அந்த அமைப்பு இணையத்தில் மட்டும்தான் இப்போதைக்கு வாழ் கிறது; உண்மையில் அதில் எத்தனை பேர் உறுப்பினர்கள் என்பதோ, அதற்குள்ள செல்வாக்கு என்ன என்பதோ தெரியவில்லை.

ஈரானில் சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதலுக்குத் தாங்கள்தான் காரணம் என்றும் பெக்கா பள்ளத்தாக்கின் பிரைடால் பகுதியில் இருக்கும் ஷியா கிராமத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்றும் அது கூறியிருப்பதால்தான் அதிகாரிகள் அதன் வெற்று மிரட்டலை பெரிய அச்சுறுத்தலாகக் கருதாமல் இருக்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் லெபனானின் சன்னிகளையும் ஷியாக்களையும் மோத விடப்போவதாக வந்த எச்சரிக்கைகள் அனைத்துமே நல்லவேளையாக உண்மையில் நடைபெறாமல் வெற்று மிரட்டல்களாகவே முடிந்துவிட்டன. அதே போலத்தான் இப்போது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்த, புதிய முயற்சி நடக்கிறது. அதுவும் அரசியல் காரணங் களால்தான். மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் இத்தகைய சக்திகளைக் கண்காணிப்பதையும் ஒடுக்குவதையும் தொடரும் அதே வேளையில் வெற்று மிரட்டல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் இல்லை.

லெபனானில் வெவ்வேறு வகையிலான சிறுபான்மையோர் அதிகம்; அவர்களிடையே பிளவை ஏற்படுத்தத் தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன. அவற்றை முறியடிக்க ஒரே வழி, பிரிவினையாளர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் ஏதும் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதுதான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE