1915- முதல் உலகப் போரின் இரண்டாம் ஆண்டு

By செய்திப்பிரிவு

பிரிட்டன் மண்ணில் முதல் வான்வழித் தாக்குதல் நடந்தது. அந்நாட்டின் கிரேட் யார்மெளத் மற்றும் கிங்ஸ் லைன் பகுதிகளில் ஜிப்லின் விமானங்கள் குண்டுவீசின.

பிப்ரவரி 18: பிரிட்டன் கப்பல்கள் மீதான தாக்குதலை ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடங்கின. போரில் பங்கேற்காத நாடுகளின் கப்பல்களும் தாக்கப்பட்டன.

மார்ச் 10: பிரான்ஸின் நியூவே சாப்பல் என்ற இடத்தில் நடந்த சண்டையில், இரண்டே நாட்களில் பிரிட்டன் தரப்பில் 12,800 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனின் தரமற்ற குண்டுகள்தான் அந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

ஏப்ரல் 22: பெல்ஜியத்தில் உள்ள ஐப்ரஸ் நகரில், இரண்டாம் ஐப்ரஸ் தாக்குதல் நடந்தது. முதன் முறையாக விஷவாயுவைப் பயன்படுத்தியது ஜெர்மனி.

மே 2: ஆஸ்திரியா - ஜெர்மனி கூட்டுப்படையினர் ஸ்பெயினின் காலிசியா பகுதியில் தாக்குதலைத் தொடங்கினர்.

மே 23: ஆஸ்திரியா - ஹங்கேரி மீது போர் அறிவித்தது இத்தாலி.

மே 25: தரமற்ற வெடிகுண்டுப் பிரச்சினை பிரிட்டன் அரசியலில் வெடித்தது.

மே 31: லண்டன் நகரில் ஜெர்மன் படையின் ஜிப்லின் விமானம் குண்டுவீசியதில் ஏழு பேர் கொல்லப் பட்டனர். 35 பேர் காயமடைந்தனர்.

ஜூன் 4: துருக்கியின் காலிபோலி பகுதியில் மூன்றாவது கிரித்தியா போர் தொடங்கியது.

ஜூன் 30: பெல்ஜியத்தின் ஹூக்ஸ் பகுதியில், முதன் முதலில் பிரிட்டன் படையினருக்கு எதிராக, தீயை உமிழும் கருவியைப் பயன்படுத்தியது ஜெர்மனி.

ஆகஸ்ட் 4: போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றியது ஜெர்மனி.

அக்டோபர் 31: முதன்முறையாக பிரிட்டன் படை வீரர்கள் எஃகு தலைக்கவசங்கள் அணிந்து போரிட்டனர்.

டிசம்பர் 15: பிரிட்டன் தலைமைத் தளபதி பதவியில் சர். ஜான் பிரெஞ்சுக்குப் பதிலாக சர். டக்ளஸ் ஹேய்க் பொறுப்பேற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE