1918- முதல் உலகப் போரின் இறுதி ஆண்டு

By செய்திப்பிரிவு

ஜனவரி 16

முதல் உலகப் போரின் பாதிப்புகளால் அதிருப்தியடைந்த ஆஸ்திரிய - ஹங்கேரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மார்ச் 3

ஜெர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் உக்ரைனில் உள்ள ப்ரெஸ்ட்-லிட்வோஸ்க் பகுதியில் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது.

மே 10

பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தில் பிரிட்டன் கப்பல்படையினர், ஜெர்மனி கப்பல்கள் மீது இரண்டாவது தாக்குதலைத் தொடங்கியது.

மே 19

லண்டன் நகர் மீது ஜெர்மனி போர் விமானங்கள் கடைசி முறையாக, மிகப் பெரிய தாக்குதலில் இறங்கின.

ஜூலை 15

பிரான்ஸின் மார்ன் பகுதியில் நடந்த இரண்டாவது சண்டையில், நேச நாடுகளின் பலம்வாய்ந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஜெர்மனி, தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.

செப்டம்பர் 22

பால்கன் வளைகுடா பகுதியில், ஜெர்மனி தலைமையிலான மத்திய வல்லரசுகள் அணிக்கு எதிரான மிகப் பெரிய வெற்றியை நேச நாடுகள் அடைந்தன.

அக்டோபர் 4

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய - ஹங்கேரி தரப்பில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு அமைதி வேண்டுகோள் அனுப்பப்பட்டது.

அக்டோபர் 30

மெசபடோமியா பகுதியில் பிரிட்டன் படைகளிடம் துருக்கிப் படைகள் (ஆட்டோமான் சாம்ராஜ்யம்) சரணடைந்தன. நேச நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் துருக்கி கையெழுத்திட்டது.

நவம்பர் 9

ஜெர்மனிப் பேரரசர் இரண்டாம் வில்லியம் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஹாலந்துக்குத் தப்பியோடினார். பெர்லினில் மக்கள் புரட்சி வெடித்தது.

நவம்பர் 11

நேச நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாலை 5 மணிக்கு கையெழுத்தானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE