மகாராஷ்டிர மாநிலத்தில், தமது கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் அரசியல் காய்நகர்த்தலால் ஆட்சியை இழந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக நடத்திய சட்டப் போராட்டம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் தோல்வியில் முடிந்திருக்கிறது. இத்தீர்ப்பை, இரு தரப்புமே தங்களுக்குச் சாதகமானதாக முன்வைப்பது விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. கூடவே, மக்கள் பிரதிநிதிகள், ஆளுநர் ஆகியோர் தார்மிக நெறியிலிருந்து வழுவுதல் கூடாது எனும் கருத்தும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட வேண்டியிருக்கிறது.
ஜூன் 2022இல் நடந்த மகாராஷ்டிர மேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த சிவசேனா எம்எல்ஏ-க்கள் சிலர் குறித்து, கட்சித் தலைமை கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் யுத்தம், உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவும், பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் புதிய ஆட்சி அமைக்கவும் வழிவகுத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago