மனிதகுலத்தை விஞ்சும் ஏஐ: கடிவாளத்துக்கான தருணம்

By சோம வள்ளியப்பன்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த, ‘ஏஐ’ யுக அபாயங்களை எப்படித் தவிர்ப்பது?’ (ஏப்ரல் 28) கட்டுரை பல முக்கியத் தகவல்களைப் பதிவுசெய்திருந்தது. கூகுள் தலைமை நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து ஆக்கபூர்வமான நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், அதில் பொதிந்திருக்கும் புரியாத பகுதிகள் குறித்துக் கவலை தெரிவித்தார்.

இத்தொழில்நுட்பம் குறித்துப் புகழ்பெற்ற இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங் கூறியிருந்த கருத்துகளும் நினைவுகூரத்தக்கவை. ‘மனிதர்கள் எழுதும் கணினி நிரல்கள் (program) மூலம், உள்ளீடுசெய்யப்படும் அறிவை வைத்துக்கொண்டு செயல்படுகிற ஏஐ தொழில்நுட்பமானது, அதை எழுதுபவர்கள் சொல்லாமலேயே, சுயமாகச் சிந்திக்கவும் புதிய நிரல்களை எழுதிக்கொள்ளவும் ஆரம்பித்துவிடும் ஆபத்து இருக்கிறது’ என்பது ஹாக்கிங்கின் கருத்து. அதற்கான அறிகுறிகளும் தற்போது தென்படத் தொடங்கிவிட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE