இப்படிக்கு இவர்கள்: மருத்துவர்களும் விழிப்புணர்வு பெற்றோம்

By செய்திப்பிரிவு

மருத்துவர் கு.கணேசன் எழுதிய ‘மறைந்து தாக்கும் மாரடைப்பு: உஷார்!’ (06.06.2022) என்ற கட்டுரையைப் படித்தேன். மிகவும் சிறப்பான விழிப்புணர்வு தரும் கட்டுரை. குறிப்பாக, அதிக அளவில் வியர்ப்பது குறித்து ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன்.

எனது நெருங்கிய மருத்துவ நண்பரின் தந்தை சென்னையில் இருந்தவர், குளித்துவிட்டு பூஜை அறையில் இருந்தபோது மார்புப் பக்கம் இறுக்கமாகி, வியர்த்துத் தெப்பமாக நனைந்துவிட்டார். தான் புதிதாகப் போட்ட பனியன் அளவு சரியில்லாததால் இறுக்கத்தில் வியர்ப்பதாக நினைத்து சற்றே அலட்சியப்படுத்தியதாலும், வீட்டின் மிக அருகில் இருக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைக்குப் போக்குவரத்து நெரிசலில் செல்வதற்குத் தாமதமானதாலும் உயிரிழந்தார்.

பெரும்பாலான மக்களும் சரி, மருத்துவர்களும் சரி, தங்களுக்கு வரும் ஆரம்ப உபாதைகளை இன்றளவும் சரியாக அணுகாமல், ஒருவித பயத்தின் காரணமாகக்கூட முழுமையான மருத்துவப் பரிசோதனைகளையும் செய்யாமல் தவிர்க்கின்றனர் என்பதுதான் நடைமுறை உண்மை. இந்தக் கட்டுரைக்குப் பிறகாவது அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நல்லது.

- டாக்டர் கே.முத்துக்குமார், குழந்தைகள் நலத் துறைத் தலைவர்,
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, திருச்சி.

கட்டுரையின் லிங்க்: மறைந்து தாக்கும் மாரடைப்பு: உஷார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE