கரோனாவிலிருந்து தப்பிக்க நோய்‌ எதிர்ப்பு‌ சத்தியை அதிகப்படுத்துவது எப்படி?

By செய்திப்பிரிவு

கரோனாவைப்‌ பற்றி நிறைய செய்திகள்‌ வந்த வண்ணமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக வரும்‌ செய்தி நோய்‌ எதிர்ப்பு‌ சக்தியைப் பற்றிதான்‌. நோய்‌ எதிர்ப்பு‌ சக்தி குறைவாக உள்ளவர்களைத்‌ தான்‌ கரோனா அதிகம்‌ பாதிக்கிறது என்றும்‌, ஆனால்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சத்தியை எப்படி அதிகப்படுத்துவது என்பது பற்றி கட்டுரைகள்‌ அதிகம்‌ வெளிவரவில்லை.

ஆகையால்‌ பலர்‌ இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்‌. எளிய உணவு முறைகளினாலும்‌, உடற்பயிற்சியினாலும்‌ மற்றும்‌ சில வழிமுறைகளினாலும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்‌.

கரோனா குழந்தைகளைக்‌ தாக்குவது மிகவும்‌ குறைவே. அதற்கு முக்கிய காரணம்‌ அப்பருவத்தில்‌ உள்ள அதிகமான நோய்‌ எதிர்ப்பு‌ சக்திதான்‌. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும்‌ தாய்ப்பால்‌ நோய்‌ எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க முக்கியக் காரணமாகும்‌. மற்ற பருவங்களில்‌ வரும்‌ நீரிழிவு நோய்‌, உயர்‌ ரத்த அழுத்தம்‌, ஆஸ்துமா, சிறுநீரகப்‌ பாதிப்பு,‌ புற்று நோய்கள்‌ போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைக்‌ குறைக்கும்‌. ஆனால்‌ குழந்தைப்‌ பருவத்தில்‌ இத்தொல்லைகள்‌ மிகவும்‌ குறைவே.
இந்நோய்க்கு எடுத்துக்‌ கொள்ளும்‌ சிகிச்சையினாலும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு. இவை‌ எல்‌லாம் குழந்தைப்‌ பருவத்தில்‌ மிகவும்‌ குறைவே. தினமும்‌ குழந்தைகள்‌ விளையாடுவதினால்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய்‌ எதிர்ப்பு சக்தி சுமார்‌ 50 வயதிலிருந்து குறைய ஆரம்பிக்கிறது.

நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில வழிமுறைகள்‌

# உடலில்‌ உள்ள நீரிழிவு நோய்‌, இதய நோய்‌ மற்றும்‌ பல நோய்களுக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்‌ கொள்வது அவசியம்‌.
# நோய்களுக்கு எடுத்துக்‌ கொள்ளும்‌ மாத்திரைகளின்‌ அளவை முடிந்த அளவிற்கு குறைத்துக்‌ கொள்ள வேண்டும்‌.
# நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழவகைகளில்‌ மிகவும்‌ உயர்ந்தது பெரிய நெல்லிக்காய்‌தான்‌. இதை அப்படியே உண்ணலாம்‌. ஆனால்‌ கசப்பு அதிகமாக இருப்பதால்‌ தேன்‌ அல்லது நாட்டுச்‌ சர்க்கரையைச்‌ சேர்த்து உண்ணலாம்‌. ஆனால்,‌ நீரிழிவு நோய்‌ உள்ளவர்கள்‌ இனிப்பைச் சேர்க்காமல்‌ அப்படியே உண்ண வேண்டும்‌ அல்லது பழச்சாறாக எடுத்துக்‌ கொள்ளலாம்‌.
இதில்‌ நூறு சதவிகூிதம்‌ “வைட்டமின்‌ சி: உள்ளது. நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும்‌ சிறந்தது. இதற்கு அடுத்ததாக எலுமிச்சம்‌ பழச்சாறை தினமும்‌ அருந்துவது நல்லது. இதை தவிர ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும்‌ கொய்யா சிறந்தது. கொட்டை வகைகளில்‌ பாதாம்‌ மிகச் சிறந்தது.

பாகற்காய்‌, தேன்‌, காளான்‌, பூண்டு, இஞ்சி, தயிர்‌, மிளகு மற்றும்‌ மஞ்சள்‌ போன்ற வகைகளை உணவில்‌ சேர்த்துக்‌ கொள்ளவும்‌. குர்குமின்‌ (போம்‌) இதன்‌ வேதிப்‌ பொருள்‌ மஞ்சளில்‌ அடங்கியுள்ளது. இதனால்‌ மஞ்சள்‌, நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும்‌ இல்லாமல்‌ ஒரு கிருமிநாசினியாகவும்‌ செயல்படுகிறது.

# தினமும்‌ காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ அரை மணிநேரம்‌ உடலில்‌ வெயில்‌ படுமாறு நடக்க வேண்டும்‌. தோல்‌ சற்று கருமை நிறம்‌ இருப்பவர்கள்‌, மேலும்‌ 10 நிமிடம்‌ வெயிலில்‌ இருப்பது அவசியம்‌. இதன்‌ மூலம்‌ வைட்டமின்‌ டி சத்து உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்‌ செய்யும்‌. வைட்டமின்‌ டி அதிகம்‌ உள்ள உணவுகளை சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

உதாரணமாக சைவ உணவுகளில்‌ பால்‌, தயிர்‌, வெண்ணெய்‌, சோயா பால்‌, பாலாடைக்‌ கட்டி மற்றும்‌ பால்‌ பொருட்கள்‌ அதிகமாக எடுத்துக்‌கொள்ள வேண்டும்‌. அரிசியை குறைத்துக்‌கொண்டு சிறு தானிய வகைகளை (ராக, கம்பு, சோளம்‌, வரகு, தினை) உணவில்‌ சற்று சேர்த்துக்‌ கொள்ளலாம்‌. மீன்‌ (சிறியது), மீன்‌ எண்ணெய்‌, முட்டையின்‌ மஞ்சள்‌ ௧ரு, ஈரல்‌, காளான்‌ முதலியவற்றைச் சேரத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

மாற்று சிகிச்சை முறைகள்‌

# அமுக்கரா கிழங்கு
# திரிபலா மாத்திரை
# கபசுரக் குடிநீர்‌ மறறும்‌ நிலவேம்புக் கசாயம்‌
ஆகியவை மாற்று சிகிச்சை முறையில பரிந்துரைக்கப்படுகிறது.

# தினமும்‌ மேற்கொள்ளும்‌, தியானம்‌ மற்றும்‌ பிராணாயாமம்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்‌ செய்யும்‌.
# சில யோகா பயிற்சிகள்‌ மூலம்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சக்தியை அதிகரிக்கச்‌ செய்யலாம்‌.

# எளிய உடற்பயிற்சி மூலமும்‌ உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சக்தி அதிகரிக்கும்‌. பெர்மிங்காம்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள முதியோர்‌ நலத்துறையின்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ ஜென்னட்லார்டு சுமார்‌ 20 ஆண்டுகள்‌ ஆராய்ச்சிக்குப் பின்னர்‌ சில எளிய உடற்பயிற்சி மூலம்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்‌ என்பதைக் கண்டறிந்துள்ளார்‌. இப்பயிற்சி செய்ய ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம்‌. பணமும்‌ செலவு செய்ய வேண்டாம்‌. வீட்டிலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பயிற்சிகளை தினமும்‌ செய்தால்‌ போதும்‌ இவை‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்‌ செய்யும்‌.

டாக்டர் வ.செ.நடராசன்

1. முதல்‌ பயிற்சி : கால்‌ விரல்களை நிலத்தில்‌ ஊன்றி, குதிகால்களை மேலே தூக்கியும்‌, கீழே இறக்கியும்‌ 10 முறை‌ செய்யவும்‌. இந்தப்‌ பயிற்சியை செய்யும்‌போது கீழே விழாமல்‌ இருக்க சுவர்‌ அல்லது ஜன்னலைப்‌ பிடித்துக்‌ கொண்டு செய்யவும்.

2. இரண்‌டாவது பயிற்சி : நேராக நின்று கொண்டு வலது காலை முடிந்தவரை பக்கவாட்டில்‌ உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்கவும்‌. இதைப்‌ போலவே இடது காலை பக்கவாட்டில்‌ உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்கவும்‌. இதுபோல்‌ 10 முறை‌ செய்யவும்‌.

3. மூன்றாவது பயிற்சி : நேராக நின்றுகொண்டு இரண்டு கைகளிலும்‌ சிறிய எடை உள்ள பளுவை எடுத்துக்‌கொண்டு தோள் பட்டை வரை உயர்த்தி சிறிது நேரம்‌ கழித்து கீழே இறக்க வேண்டும்‌. இதுபோல்‌ 10 முறை‌ செய்ய வேண்டும்‌.

4. நான்காவது பயிற்சி : ஒரு நாற்காலியில்‌ அமர்ந்துகொண்டு கைகளை முகத்திற்கு நேராக நீட்டிக்கொண்டு 10 முறை உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்‌.

5. ஐந்தாவது பயிற்சி : வீட்டிலுள்ள படிக்கட்டில்‌ 10 முறை ஏறி இறங்க வேண்டும்‌.

மேற்கொண்ட வழிமுறைகளைத்‌ தொடர்ந்து கடைப்பிடித்தால்‌ நோய்‌ எதிர்ப்பு‌ சக்தி அதிகரித்து கரோனா போன்ற கொடிய நோய்களிலிருந்து எளிதில்‌ நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்‌!

- பத்மஸ்ரீ டாக்டர் வ.செ.நடராசன்,
முதியோர் நல மருத்துவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்