புதிய காடுகளை உருவாக்குவது மனித குலத்தின் கடமை!

By எம்எஸ்

இந்தியாவின் வனப்பரப்பு அறிக்கை - 2023 சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில், நாட்டின் மொத்த பரப்பில் 25 சதவீதம் காடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு அதிகமான பரப்பில் உள்ள காடுகளின் அளவு தனியாகவும், அதற்கு குறைவான இடத்தில் உள்ள மரங்களின் அடர்த்தி தனியாகவும் பிரிக்கப்பட்டு இஸ்ரோவின் செயற்கைக் கோள் உதவியுடன் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 21.76 சதவீதம், அதாவது 7.15 லட்சம் சதுர கி.மீ. பரப்பில் காடுகள் இருப்பதாகவும், 3.41 சதவீதம் (1,289 சதுர கி.மீ) மரங்களின் அடர்த்தி இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இருந்த அளவைவிட சொற்ப அளவிலேயே காடுகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது. காடுகளின் அளவை பொருத்தவரை, நாட்டிலேயே முதலிடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. அங்கு 85 லட்சத்து 724 சதுர கி.மீ. பரப்பில் காடுகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் காடுகளின் அளவை அதிகரித்துள்ள மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடத்தில் உள்ளது.

இங்கு சமீப ஆண்டுகளில் 684 சதுர கி.மீ. அளவுக்கு காடுகளின் அளவை அதிகரித்து சாதனை படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. உலக அளவில் பூமியின் நிலப்பரப்பில் 31 சதவீதம், அதாவது 406 கோடி ஹெக்டேர் அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட காடுகள் ரஷ்யா, பிரேசில், கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய 5 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. மக்கள்தொகையுடன் காடுகளின் அளவை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு 5,000 சதுர கி.மீ. அளவுக்கு காடுகளின் அளவை பராமரிக்க வேண்டும் என்பது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவாகும்.

அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (எஃப்ஏஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் 9.90 கோடி ஹெக்டேர் காடுகள் உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கிழக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ள விவரமும் வெளிவந்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்க காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், நீர் சுழற்சி, சுகாதாரமான காற்று, மண்ணின் வளம், காட்டுயிர்கள் ஆகிய அனைத்துக்கும் உயிர்வாழ, உணவு உற்பத்தி செய்ய, சுகாதாரத்தைப் பேண காடுகள் அவசியம். காடுகளையும், விளை நிலங்களையும் அழித்துதான் மனிதர்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு பரிகாரமாக, புதிதாக காடுகளை உருவாக்குவது மனிதகுலத்தின் கடமை.

இந்திய நிலப்பரப்பை பொருத்தவரை, 33 சதவீதம் அளவுக்கு காடுகள் இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆய்வறிக்கையில், 25 சதவீதம் அளவுக்கே காடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அளவை 33 சதவீதமாக உயர்த்தவேண்டிய கடமை மற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் உண்டு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்