தொடர் நடவடிக்கைகளால் போதை பொருள் கடத்தல் சங்கிலியை தடுத்துள்ளோம்: டிஜிபி சங்கர் ஜிவால் சிறப்பு நேர்காணல்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ​போதைப் பொருட்கள் நடமாட்​டம், கொலை, கொள்ளை, ரவுடிகள் மோதல், என்க​வுன்ட்டர் சர்ச்சை, சைபர் குற்ற மோசடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்​கட்​சிகள் காவல் துறை மீது குற்​றச்​சாட்டுகளை முன்​வைக்​கின்றன. இந்நிலை​யில், சட்டம்​-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிக்கு அளித்த பிரத்யேக நேர்​காணல்:

தமிழகத்​தில் போதைப் பொருள் புழக்​கத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது?

போதை மற்றும் புகை​யிலைப் பொருட்கள் புழக்​கத்தை முற்றி​லும் ஒழிக்க 2022 ஆக. 10-ம் தேதி முதல்வர் ஸ்டா​லின் தலைமை​யில் மாநில அளவிலான மாநாடு சென்னை​யில் நடத்​தப்​பட்​டது. இதில், புதிய உக்திகள் வகுக்​கப்​பட்டன. 2023-ல் 10,256 வழக்​குகள் பதிவு செய்​யப்​பட்டு, 14,770 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மிருந்து 23,364 கிலோ கஞ்சா, 0.953 கிலோ ஹெரா​யின், 39,910 போதை மாத்​திரைகள் மற்றும் 1,239 கிலோ மற்ற போதைப் பொருட்கள் (கஞ்சா சாக்​லேட், மெத்​தம்​பெட்​டமைன், ஆம்பிடா​மைன் மற்றும் மெத்​தாகுலான்) ஆகியவை கைப்​பற்​றப்​பட்டன.

நடப்​பாண்டு ஆகஸ்ட் வரை 6,054 வழக்​குகள் பதிவு செய்​யப்​பட்டு, 9,731 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். போதைப் பொருட்கள் விற்பனை செய்​வோரின் சொத்துகள் பறிமுதல் செய்​யப்​படு​கின்றன. மேலும், போதைப் பழக்​கத்​துக்கு எதிராக இளைஞர்​கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்பு​ணர்வு ஏற்படுத்து​கிறோம். தொடர் நடவடிக்கை​யால் தமிழகத்​தில் கஞ்சா பயிரிடுவது முற்றி​லும் தடுக்​கப்​பட்​டுள்​ளது. போதைப் பொருள் கடத்தல் சங்கி​லியை தடுத்​துள்ளோம்.

முன் விரோதம், அரசியல் கொலைகளை தடுக்க எடுக்​கப்​பட்ட நடவடிக்கைகள் என்ன?

ரவுடிகள் தொல்லை, அரசியல் கொலைகள், சட்டம்​-ஒழுங்கு பிரச்​சினை தொடர்பாக எதிர்​க்கட்​சிகள் உண்மைக்​குப் புறம்பான தகவல்களை வெளி​யிட்​டனர். மக்களவை, சட்டப்​பேரவை இடைத்​தேர்​தல்களை முன்னிட்டு தேர்தல் ஆதாயத்​துக்காக பொய்யான தகவல்​களைப் பரப்​பினர். கடந்த ஆண்டு​களைவிட கொலைகள் குறைந்​துள்ளன. அரசியல் கொலைகள் என்று குறிப்​பிடப்​பட்ட சம்பவங்​களில், தனிநபர் முன்​விரோதமே அடிப்​படைக் காரணம் என கண்டறியப்​பட்​டுள்​ளது.
தற்போது சட்டம்​-ஒழுங்கு சிறப்பாக கையாளப்​படு​கிறது. 2019-ல் 1,678 கொலை வழக்​குகள் என்ற உச்சத்தை எட்டிய நிலை​யில், நடப்​பாண்டு செப்​டம்பர் வரை 1,183 கொலை வழக்​குகள் மட்டுமே பதிவாகி​யுள்ளன. இதற்கு போலீ​ஸாரின் தொலைநோக்​குப் பார்​வை​யும், தொடர் நடவடிக்கைகளுமே காரணம்.

என்கவுன்​ட்டருக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

என்க​வுன்ட்டர் முன்​கூட்​டியே திட்​ட​மிடப்​பட்ட நடவடிக்கை அல்ல. சூழ்​நிலை, குற்​றவாளி​யின் செயல்​பாடுகள் மற்றும் வழக்​கின் தீவிரம் ஆகிய​வற்​றைப் பொறுத்​தும், காவல் துறை​யினரின் தற்காப்​புக்​காக​வும் என்க​வுன்ட்​டர் நடத்​தப்​படு​கிறது. அதேநேரத்​தில், ரவுடிகளைக் கட்டுப்​படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ளன. கொலை வழக்​கு​களில் போலி குற்​றவாளிகள் சரணடைவதை தடுக்​க​வும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. உளவுத் துறை கண்காணிப்பு மூலமும் ரவுடிகளின் செயல்​பாடுகள் கட்டுப்​படுத்​தப்​பட்டு, குற்றச் சம்பவங்கள் குறைந்​துள்ளன.

காவல் துறை​யில் சைபர் செக்​யூரிட்டி, ஏஐ (AI) தொழில்​நுட்பம் போன்ற புதிய பிரிவுகள் தொடங்​கப்பட வாய்ப்பு உள்ளதா?

ஏஐ தொழில்​நுட்பம் சார்ந்த புதிய பிரிவு தொடங்​கு​வதற்கான முன்​வரைவு தற்போது இல்லை. சைபர் குற்​றங்​களைக் கையாள நவீன தொழில்​நுட்பம் மற்றும் உபகரணங்கள் பயன்​படுத்​தப்​படு​கின்றன. சைபர் மோசடிகளை தடுத்து, சம்பந்​தப்​பட்ட குற்​றவாளிகளை கைது செய்​வதுடன், இழந்த பணத்தை மீட்டுத் தருகிறோம்.

மாவட்ட வாரியாக உள்ள வெவ்​வேறு பிரச்​சினைகளை காவல் துறை எவ்வாறு கையாள்​கிறது?

அந்தந்தப் பகுதி​களுக்கு ஏற்ப சமூக, பொருளா​தார, மக்கள்​தொகை அடிப்​படையிலான பிரச்​சினை​கள், விவகாரங்கள் குறித்து தரவுகள் முன்​கூட்​டியே சேகரிக்​கப்​பட்டு, டிஜிபி அலுவல​கத்​தில் பாரமரிக்​கப்​படு​கின்றன. அதனடிப்​படை​யில் முன்னெச்​சரிக்கை நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு, சட்டம்​-ஒழுங்கு பாது​காக்​கப்​படு​கிறது.

அனைத்து தரப்பு மக்களும் பாது​காப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்று எதை அடிப்​படையாக வைத்து சொல்​கிறீர்​கள்?

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்​றங்களை தடுத்து, விவசா​யிகள், வியாபாரி​கள், தொழில்​முனை​வோர், புலம்​பெயர் தொழிலா​ளர்​கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்​துத் தரப்​பினரும் பாது​காப்பாக வாழும் சூழலை ஏற்படுத்​தி​யுள்​ளோம். கொலை, ஆதாயக் கொலைகள் வெகு​வாகக் குறைக்​கப்​பட்​டுள்ளன. நாட்​டில் உள்ள பெரிய மாநிலங்​களி​லேயே தமிழ்​நாடு குற்றச் சம்பவங்கள் குறைவாக உள்ள மாநில​மாகக் கண்டறியப்​பட்​டுள்​ளது. பெண்​கள், குழந்தை​களுக்கான பாது​காப்​பில் சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்​தில் உள்ளது.

நான் டிஜிபி​யாகப் பொறுப்​பேற்ற 2 ஆண்டு​களில், புதிய முன்னெடுப்பு​கள், திட்​டங்கள் மற்றும் வழிமுறைகள் உருவாக்​கப்​பட்டு, அவை சிறப்​பாகச் செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன. குற்​றவாளி​களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தரும் வகையில் `கூகுள் சீட்' உருவாக்​கப்​பட்டு, எஸ்.பி., ஏடிஎஸ்பி தகுதியிலான அதிகாரி​களால் கண்காணிக்​கப்​பட்டு வருகிறது. சிறை​யில் இருந்​தவாறே சதித்​திட்டம் தீட்டி, அடியாட்கள் மூலம் குற்றம் செய்​யும் நபர்கள் கண்காணிக்​கப்​படு​கின்​றனர்.

ஆதரவற்​றோர், முதி​யோரைப் பாது​காக்க `காவல் கரங்​கள்' திட்டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. காவல் நிலை​யங்​களில் கொடுக்​கப்​படும் புகார் மனுக்​களுக்கு உடனடியாக ரசீது வழங்​கும் முறை அறிமுகம் செய்​யப்​பட்​டுள்​ளது. வேலைக்காக கிழக்​காசிய நாடு​களுக்​குச் சென்று, சைபர் அடிமை​களாக மாற்​றப்​பட்​ட​வர்கள் மீட்​கப்​பட்​டதுடன், உள்நாட்டு முகவர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

காவலர் நலன் சார்ந்த திட்​டங்கள் செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன. போலீ​ஸாரின் தொடர் நடவடிக்கைகளால் நாட்​டிலேயே பாது​காப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்​தில் உள்ளது. அதேபோல, பெரிய மாநிலங்​களில் மக்கள்​தொகை விகி​தாச்சார அடிப்​படை​யில், குறைவான குற்​றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழகம் என்று தேசிய குற்ற ஆவணப் ​காப்பக தர​வு​கள் குறிப்​பிடு​கின்றன. இவ்​வாறு, அனைத்து தரப்பு மக்​களும் பாது​காப்பு​டன் வாழும் சூழல் உரு​வாக்​கப்​பட்டு, கல்வி, பொருளா​தா​ரம் மற்றும் சமூக அடிப்​படை​யில் ​முன்னோடி ​மாநிலமாக தமிழகம் உரு​வாகப் பங்​காற்றி வருவது ​திருப்​தி அளித்​துள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்