தமிழில் மருத்துவ அறிவியல்! தமிழ்வழியில் படித்த மருத்துவ மாணவர்கள் அந்நிய மொழியைக் கண்டாலே மிரள்வார்கள். அவர்களில் நானும் ஒருவன். மொழி புரியாமல் தேர்வுக்கான தயாரிப்புக்கு மனனம் செய்யும் நிலைமைதான் பலருக்கும் ஏற்படும். இந்தப் பின்னணியில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள ‘மருத்துவ உடற்செயலியல்’ என்னும் மருத்துவ நூல், ‘தமிழில் மருத்துவக் கல்வி சாத்தியமே!’ என்பதை உறுதிசெய்துள்ளது.
கைட்டன் (Guyton), ஹால் (Hall) எனும் இரண்டு மருத்துவர்கள் எழுதிய முதலாண்டு மாணவர்களுக்கான ‘Medical Physiology’ மருத்துவ நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பதில் பல மருத்துவர்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழலில் இப்பணியைச் சிரமேற்கொண்டார்கள் என்பது முக்கியம். நவீன மருத்துவக் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவும் வகையில் ஒரு முழுமையான மருத்துவக் கலைச்சொல் அகராதி தமிழில் இல்லை. மணவை முஸ்தபாவின் ‘மருத்துவக் களஞ்சியம் பேரகராதி’, டாக்டர் சாமி சண்முகம் தொகுத்துள்ள ‘மருத்துவக் கலைச்சொற்கள்’, சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ வெளியிட்டுள்ள ‘கலைச்சொல் அடைவு’, தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகத்தின் ‘அறிவியல் சொல்லகராதி’, ப.அருளி தொகுத்த ‘அருங்கலைச்சொல் அகரமுதலி’, சொற்குவை.காம்... இவைதான் தற்போது மருத்துவச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவர உதவுபவை. ஆனால், இவையும் முழுமையாக இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago