பாரிஸில் என்ன புதுமை?

By ஜி.எஸ்.எஸ்

206 நாடுகளின் பங்கேற்பு, 32 ஒலிம்​பிக் விளையாட்டுகள், 22 பாராலிம்​பிக் விளையாட்டுகள், ஒன்றரை கோடிக்​கும் மேற்பட்ட பார்வை​யாளர்​கள், 400 கோடி தொலைக்​காட்சி ரசிகர்கள்​ என்று பாரிஸில் தொடங்க உள்ளது ஒலிம்​பிக் போட்டி. இதற்கு முன் நிகழ்ந்த ஒலிம்​பிக் போட்டிகளைவிட இம்முறை சில குறிப்​பிடத்தக்க மாற்றங்கள்​ நடக்க உள்ளன.

வெற்றி பெற்றவர்​களுக்கு அளிக்​கப்​படும் பதக்கங்​களில் இம்முறை (பாரிஸ் நகரின் அடையாளமான) ஈபிள் கோபுரத்​தின் ஒரு பகுதி இடம்பெறுகிறது. இந்தக்​ கோபுரம் 1889 இல் உருவானபோது வெளிப்பட்ட துகள்​களில், மறுசுழற்சி செய்யப்பட்ட ஒரு பகுதி, அறுகோண வடிவில் செதுக்​கப்​பட்டு, ஒவ்வொரு பதக்கத்​திலும் பொருத்​தப்​படு​கிறது.

முதல் முறையாக மைதானத்​தில் அல்லாமல், சீன் நதிக்​கரையில் தொடக்க விழா கொண்டாட்டங்கள்​ நடைபெறப்​போகின்றன. இதன் காரணமாக, அதிக​மானோர் இந்த விழாவைக் கண்டுகளிக்க முடியும். இந்த விழாவுக்கான கலை இயக்குநராக தாமஸ் ஜாலி நியமிக்​கப்​பட்டிருக்​கிறார். இவர் நடிகர், நாடக அமைப்பு ஒன்றை நிறுவிய​வர்.

சர்வதேச ஒலிம்​பிக் குழு இம்முறை விளையாட்டு வீரர்​களின் மனநலனை மனதில் கொண்டு சில செயல்​களைச் செய்திருக்​கிறது. மனதுக்கு அமைதி அளிக்​கும் செயலி ஒன்றை விளையாட்டு வீரர்​களுக்கு அளிக்​கிறது. அதை அவர்கள்​ தரவிறக்கம்​ செய்து​கொள்​ளலாம். தவிர, அவர்கள்​ தங்கவைக்​கப்​படும் விளையாட்டுக் கிராமத்​தில் தனியாக ஓர் இடம் ஒதுக்​கப்​பட்டிருக்​கிறது. இதற்குள் சென்று அமர்ந்​தால் வெளியில் எழுப்​பப்​படும் எந்த ஆரவார ஒலியும் கேட்காது.

சைவ உணவை விரும்​புபவர்​களின் எண்ணிக்கை அதிக​மாகிவரு​கிறது. சைவ உணவின் காரணமாகக் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைவே. இந்த ஒலிம்​பிக்​கில் அது பிரதிபலிக்​கிறது (இவ்வளவுக்​கும் ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிகமாக ஆட்டுக்​கறியை உண்பவர்​களின் எண்ணிக்கை ஃபிரான்​ஸில்​தான் அதிகம்!).

தாவரங்களை அடிப்​படை​யாகக் கொண்ட பர்கர், வேர்க்​கடலை, பீட்ரூட் ஆகியவை அடங்கிய ‘ஃபலாபெல்’ போன்ற சிற்றுண்​டிகளைப் பாரிஸ் ஒலிம்​பிக் பெருமளவில் வழங்க​விருக்​கிறது. விளையாட்டு வீரர்​களுக்கு வழங்கப்​படும் உணவில் சைவ உணவின் விகிதம் அதிகமாக இருக்​கும். ஒலிம்​பிக் ஊழியர்​கள், தன்னார்​வலர்​களுக்கான உணவகங்​களில் பாதிக்​குப் பாதி சைவ உணவு வழங்கப்​படும்.

தஹிதி என்ற பகுதி ஃபிரான்​ஸுக்​குச் சொந்த​மானது என்றபோதிலும் அந்நாட்டிலிருந்து 15,716 கி.மீ. தொலைவில் இருக்​கிறது. கடலால் பிரிக்​கப்பட்ட பகுதி. அங்குதான் வலுவான அலைகள் காணப்​படு​கின்றன என்ப​தால் ‘சர்ஃபிங்’ விளையாட்டுப் போட்டி அந்த இடத்தில் நடைபெறும். ஒலிம்​பிக் நடக்க​விருக்​கும் நகரிலிருந்து இவ்வளவு அதிகமான தொலைவில் ஓர் ஒலிம்​பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது என்பது இதுவே முதல் முறை.

பொதுவாக, ஒலிம்​பிக் விளையாட்டுகளுக்கு ஒரு தனி போஸ்டர், அதைத் தொடர்ந்து நடைபெறும் (மாற்​றுத்​திறனாளி​களுக்கான) பாராலிம்​பிக்ஸ் விளையாட்டுகளுக்​குத் தனி போஸ்டரும்​தான் உருவாக்​கப்​படும். இம்முறை இரண்டுக்​குமாக ஒரு பொதுவான போஸ்டர் அழகான விதத்​தில் உருவாக்​கப்​பட்டிருக்​கிறது.

பிரேக்​கிங் என்ற விளையாட்டுப் பிரிவு முதல் முறையாகச் சேர்க்​கப்​பட்டிருக்​கிறது. இது நமக்கெல்​லாம் பிரேக், டான்ஸ் என்ற விதத்​தில்​தான் பழக்க​மானது (இடுப்பை வளைத்​துக் கைகளை உலுக்​கியபடி ஆடப்படும் ஆட்டம் என்பது அதன் பிம்பம்). 2018 இல் நடைபெற்ற இளைஞர்​களுக்கான ஒலிம்​பிக் விளையாட்டுகளில் இது இடம்​பெற்று பெரும் வரவேற்​பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பதக்​கங்​களுக்கான போட்டி விளை​யாட்டாக இம்முறை அது தேர்​வுசெய்​யப்​பட்​டிருக்​கிறது.

- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்