புதிய அரசு மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்

By செய்திப்பிரிவு

நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார். ஜூன் 9 அன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடியுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 71 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில் 30 பேர் மத்திய (கேபினெட்) அமைச்சர்கள். ஐந்து பேருக்கு மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 36 இணை அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அனுபவம் மிக்கவர்கள் மட்டுமல்லாமல், புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நிதிக்கொள்கைகள் குறித்த விமர்சனங்களைத் தாண்டி, நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரை மோடி தலைமையிலான அரசு பல விஷயங்களில் முந்தைய அரசுகளிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. ஜெய்சங்கர் மீண்டும் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதன் மூலம் அரசு அதே பாதையில் பயணிக்க விரும்புவதை உணர முடிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்