முடிவுகளைத் தீர்மானித்த சமூக நீதி அரசியல்

By ச.கோபாலகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால், அக்கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது. இண்டியா கூட்டணிக் கட்சிகள் 230க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றன. குறிப்பாக, 2014இல் 48 இடங்களிலும், 2019இல் 52 இடங்களிலும் மட்டுமே வென்று நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறத் தவறிய காங்கிரஸ், இந்த முறை 99 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சியின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவினரின் அதீத நம்பிக்கையையும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் வலுவான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமரவிருக்கின்றன. சமூக நீதி அடிப்படையிலான அணுகுமுறைதான் இண்டியா கூட்டணிக்கு வலுசேர்த்தது என்று சொல்லலாம்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE