பொள்ளாச்சியின் மத்தியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் கல்வெட்டின் கூற்றுப்படி 1,000 ஆண்டுகள் தொன்மையானது பொள்ளாச்சி. நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் பல ஜமீன்களின் ஆளுமையின் கீழ் இருந்தன. பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்கீழ் வந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கியது பொள்ளாச்சி.1977-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியது.
தமிழகத்தில் அதிக அணைகளைக் கொண்ட மக்களவைத் தொகுதி என்பதால், தென்னை, திராட்சை, நிலக்கடலை, மக்காசோளம், காய்கறிகள், தேயிலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில் அதிகம் தேங்காய் விளையும் பகுதி இது. குறிப்பாக தென்னை விவசாயம், அது சார்ந்த தேங்காய், தேங்காய் நார் தொழில் அதிகமாக நடக்கிறது. கேரள மாநில எல்லையொட்டிய தொகுதி என்பதால் அதன் தாக்கம் உண்டு.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதி சற்று மாறுதல் அடைந்துள்ளது. கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவை பகுதியின் அரசியல், சமூக சூழல் தாக்கம் கொண்ட தொகுதியாக உள்ளது. திராவிட கட்சிகளே தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ள தொகுதி இது. மதிமுகவுக்கும் ஒட்டு வங்கி இருந்ததால் இரண்டுமுறை அக்கட்சியின் சார்பில் கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.1951, 1957, 1962 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக ஏழு முறை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
» திருநெல்வேலி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024
» கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024
• பொள்ளாச்சி
• கிணத்துக்கடவு
• மடத்துக்குளம்
• உடுமைலப்பேட்டை
• தொண்டாமுத்தூர்
• வால்பாறை (தனி)
பொள்ளாச்சி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,81,795
• ஆண் வாக்காளர்கள்: 7,66,077
• பெண் வாக்காளர்கள்: 8,15,428
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 290
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
2019-ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago