விருதுநகர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் மதுரையின் திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை உள்ளடக்கியது விருதுநகர் மக்களவை தொகுதி. முந்தைய சிவகாசி தொகுதியை ஒப்பிடுகையில் மறுசீரமைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட விருதுநகர் தொகுதி முற்றிலும் மாறுபட்டது.

பெருமளவு வறட்சியான பகுதிகளைக் கொண்ட இடம் என்பதால் விவசாயம் குறைவே. இருப்பினும், பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை உள்ளிட்டவை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மேலும், சிறு சிறு தொழில்கள் இங்கு பெரிய அளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங், பலசரக்கு, எண்ணெய் என முக்கிய தொழில்கள் நடைபெறும் விருதுநகரும், சிவகாசியும் இந்தத் தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. இந்தத் தொழில்களைச் சார்ந்து தான் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உள்ளது.

ஒரு சுவாரஸ்யம்: காமராஜரும் சங்கரலிங்கனாரும் பிறந்த மண் இது. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, காமராஜருக்கு இரண்டு முறை (1957, 1962) வெற்றியைத் தேடித் தந்த பெருமைக்குரியது. 1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார் என்பது இத்தொகுதியின் மற்றொரு சிறப்பு.

முந்தைய சிவகாசி தொகுதியிலும் சரி, மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான விருதுநகர் தொகுதியிலும் சரி பொதுவாகவே தேசிய கட்சிகள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வழக்கமாகவே திராவிட கட்சிகளின் கோட்டையாகவே இந்தத் தொகுதி இருந்து வந்துள்ளது. திமுக, அதிமுக தவிர மதிமுகவுக்கும் வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை எம்.பியாக விருதுநகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவிர, அதிமுக மூத்த தலைவராக இருந்த காளிமுத்து எம்.பியாக வெற்றி பெற்ற தொகுதி இது.சமீபத்தில், திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் இத்தொகுதியில் களம் கண்டு வருகிறது. இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ விருதுநகர்
⦁ சிவகாசி
⦁ அருப்புக்கோட்டை
⦁ சாத்தூர்
⦁ திருமங்கலம்
⦁ திருப்பரங்குன்றம்

விருதுநகர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,91,695

⦁ ஆண் வாக்காளர்கள்: 7,28,158
⦁ பெண் வாக்காளர்கள்: 7,63,335
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 202

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்
1980 சவுந்தரராஜன், அதிமுக ஜெயலட்சுமி, காங்
1984 சவுந்தரராஜன், அதிமுக ஸ்ரீனிவாசன், சிபிஐ
1989 காளிமுத்து, அதிமுக கோபாலசாமி, திமுக
1991 கனக கோவிந்தராஜூலு, அதிமுக ஸ்ரீனிவாசன், சிபிஐ 1996 அழகர்சாமி, சிபிஐ
சஞ்சய் ராமசாமி, அதிமுக 1998
வைகோ, மதிமுக அழகர்சாமி, சிபிஐ
1999 வைகோ, மதிமுக ராமசாமி, அதிமுக 2004 ரவிச்சந்திரன், மதிமுக கண்ணன், அதிமுக
2009 மாணிக் தாகூர், காங் வைகோ, மதிமுக
2014 ராதாகிருஷ்ணன், அதிமுக வைகோ, மதிமுக 2019
மாணிக்கம் தாகூர் B, காங் அழகர்சாமி R, தேமுதிக


2019-ம் ஆண்டு விருதுநகர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு விருதுநகர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்