தென் தமிழகத்தில் மதுரைக்கு நிகரான நகரமாக இருந்தது பெரியகுளம். இதனால் தான் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாகப் பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்தது. அதன்பின், மாவட்ட தலைநகரான தேனியின் பெயரிலேயே மக்களவைத் தொகுதி மாற்றப்பட்டது. மக்களவைத் தொகுதியின் பெயரில் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தொகுதி இருக்கும். விருதுநகர் மக்களவைத் தொகுதி என்றால் அதற்குள் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. ஆனால் தேனியின் பெயரில் மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ளது. தேனி சட்டப்பேரவைத் தொகுதி இல்லை.
தேனி தொகுதி ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதி. குச்சனூர் சனீஸ்வரன், வீரபாண்டி கவுமாரியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உள்ளிட்ட பழமையான கோயில்களும் இங்கு அதிகம். வைகை, முல்லைப் பெரியாறு, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட நீராதாரங்கள் இத்தொகுதியின் அடையாளம். இதனால், தமிழகத்தில் விவசாயம் நன்கு நடைபெறும் மாவட்டங்களில் தேனியும் ஒன்று. பெருமளவு விவசாயத்தை நம்பியே இந்தப் பகுதியின் பொருளாதாரம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி இது.கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி குளிர்ச்சிக்கும், இதமான பருவநிலைக்கும் பெயர் பெற்றது.
தேனி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் தேனி மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தொடக்கக் காலத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. பின்னர் அதிமுக, திமுக இடையே தான் இங்குப் போட்டி இருந்துள்ளது. இதுமட்டுமின்றி அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, தற்போது அமமுக துணைப் பொதுச்செயலாளரான டிடிவி. தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.
» சிதம்பரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024
» கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024
இத்தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி எம்ஜிஆர், ஜெயலலிதா என்று இரண்டு முதல்வர்களைத் தமிழகத்துக்கு தந்துள்ளது. 1984-ல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை வெற்றிபெற வைத்த தொகுதி ஆண்டிபட்டி. அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் போடி தொகுதியில் வெற்றிபெற்று முதல்வர் நிலைக்கு உயர்ந்தார். நடிகர் எஸ்எஸ்ஆர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ கம்பம்
⦁ போடிநாயகனூர்
⦁ பெரியகுளம் (தனி)
⦁ ஆண்டிபட்டி
⦁ உசிலம்பட்டி
⦁ சோழவந்தான் (தனி)
தேனி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,12,503
⦁ ஆண் வாக்காளர்கள்: 7,92,195
⦁ பெண் வாக்காளர்கள்: 8,20,091
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 217
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்
2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
57 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago