மதுரை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

வளம் கொழிக்கச் செய்யும் வைகை நதி பாயும் நகரம் மதுரை. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய நகரம்; தமிழ்ச் சங்கம் மூலம் தமிழ் வளர்த்த நகரம்; திருவிழாக்களின் நகரம் என்று இதன் சிறப்புகள் ஏராளம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அழகர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் இங்கு உண்டு.

நெசவுத் தொழில், ஜவுளி, வர்த்தகம், உதிரி பாகங்கள் தயாரிப்பு, உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இங்கு உள்ளன. சிறு, குறு தொழில்களும் உண்டு. மேலூர், மதுரை கிழக்கு ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதானப் பங்கு வகிக்கிறது. பெரியாறு, வைகையை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஒத்தக்கடையில் ‘சில்வர்’ பட்டறை, ஜெய்ஹிந்த்புரம், பெத்தானியபுரத்தில் சிறு தொழில்கள் பிரதானமாக உள்ளன.

தமிழகத்தில் சென்னைக்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமான மதுரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. பல அரசியல் கட்சிகளும், மாநாடு, கூட்டம் என தங்கள் வலிமையைப் பறைசாற்றும் இடமாக மதுரை தொடர்ந்து விளங்கி வருகிறது. அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் மிக்க தொகுதி. ஒரு காலத்தில் கிராமப்புறங்களையும் உள்ளடக்கிய தொகுதியாக இருந்த மதுரை தொகுதி சீரமைப்புக்குப் பிறகு பெருமளவு நகரத்தை மட்டுமே கொண்ட தொகுதியாக மாறி இருக்கிறது.

மதுரையின் வெற்றி என்பது கட்சியின் வளர்ச்சிக்கு அடிகோலும் என்பதால் இதில் அனைத்து கட்சிகளுமே கவனம் செலுத்துகின்றன. அதுபோலவே குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே ஆதரவு தரும் தொகுதியாக இல்லாமல், அந்தந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப, தமிழகம், நாட்டின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தொகுதியாகவே மதுரை விளங்கியுள்ளது.

இடதுசாரி இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களான கே.டி. தங்கமணி, ராமமூர்த்தி, சங்கரைய்யா எனப் பல ஜாம்பவான்கள் எம்.பி.யான தொகுதி இது. காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரான கக்கன் களம் கண்ட தொகுதி. ஜனதா கட்சியின் சுப்பிரமணியின் சுவாமியும், போட்டியிட்டு வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியே இந்த தொகுதியில் அதிகம் வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இடதுசாரி கட்சிகள் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் வென்று முத்திரை பதித்தது அதிமுக. மறைந்த தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி 2009-ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் எம்.பி.யானார். இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ மதுரை வடக்கு
⦁ மதுரை தெற்கு
⦁ மதுரை மேற்கு
⦁ மதுரை கிழக்கு
⦁ மதுரை மத்தி
⦁ மேலூர்

மதுரை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,76,745

⦁ ஆண் வாக்காளர்கள்: 7,74,381
⦁ பெண் வாக்காளர்கள்: 8,02,176
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 188

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர் 1980 சுப்புராமன், காங் பாலசுப்ரமணியம், சிபிஎம் 1984
சுப்புராமன், காங் சங்கரைய்யா, சிபிஎம் 1989 ராம்பாபு, காங் மோகன், சிபிஎம்
1991
ராம்பாபு, காங்
மோகன், சிபிஎம் 1996 ராம்பாபு, காங், தமாகா
சுப்பிரமணியன் சுவாமி, ஜனதா 1998
சுப்பிரமணியன் சுவாமி, ஜனதா ராம்பாபு, தமாகா
1999 மோகன், சிபிஎம் பொன் முத்துராமலிங்கம், திமுக
2004 மோகன், சிபிஎம் ஏ.கே. போஸ், திமுக 2009 அழகிரி, திமுக மோகன், சிபிஎம் 2014 கோபாலகிருஷ்ணன், அதிமுக வேலுசாமி, திமுக
2019
சு. வெங்கடேசன், சிபிஎம் இராஜ் சத்யன் V.V.R., அதிமுக


2019-ம் ஆண்டு மதுரை மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு மதுரை மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

32 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்