தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் பண்பாட்டுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் அடையாளங்களில் ஒன்று தஞ்சாவூர். சமையல் தொடங்கி, இயல், இசை, நாடகம் என முத்திரைப் பதித்த மண் இது. கலைகள் செழித்தோங்கி வளர்ந்த தஞ்சை தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கிறது. பிற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தந்த பூமி. இங்கு நிரம்பி இருக்கும் கோயில்கள் தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

தஞ்சை பெரிய கோயிலும், திருவையாறு ஆராதனை விழாவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியுமே தனித்தனி அடையாளத்தைக் கொண்டதாக விளங்குகிறது. காவிரி டெல்டா பகுதியைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. காவிரி தண்ணீர்க்காக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அதிகமாகக் கொண்ட பகுதி இது. ’உலகுக்குச் சோறு வழங்கிய சோழ வளநாடு’ தற்போது விவசாயம் செய்ய காவிரி தண்ணீருக்காகப் போராடி வருகிறது.

அரசியல் ரீதியாகவும் தஞ்சை தனி அடையாளத்தைக் கொண்டது. தமிழகத்தில் திமுக வலிமையடைந்த பிறகு அதற்கு வலிமை சேர்க்கும் முக்கிய பகுதியாக தஞ்சை விளங்கி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சிங்காரவடிவேல், துளசி அய்யா வாண்டையார் போன்றவர்கள் எம்.பியாக இருந்த தொகுதி தஞ்சை. திமுகவின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் 6 முறை வென்ற தொகுதி இது. திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியே நேரடியாகக் களம் கண்டுள்ளது. அதேசமயம் அதிமுக பொறுத்தவரையில் பலமுறை இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கியுள்ளது. 1977-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் வென்ற அதிமுக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

• தஞ்சாவூர்
• திருவையாறு
• ஒரத்தநாடு
• பட்டுக்கோட்டை
• பேராவூரணி
• மன்னார்குடி

தஞ்சாவூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,94,216
• ஆண் வாக்காளர்கள்: 7,23,787
• பெண் வாக்காளர்கள்: 7,70,300
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 129

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்
1971 சோமசுந்தரம், திமுக
கிருஷ்ணசாமி, ஸ்தாபன காங் 1977
சோமசுந்தரம், அதிமுக எல்.கணேசன், திமுக 1980 சிங்காரவடிவேல், காங் தங்கமுத்து, அதிமுக
1980 (இடைத்தேர்தல்)
சிங்காரவடிவேல், காங்
தர்மலிங்கம், திமுக
1984 சிங்காரவடிவேல், காங் பழனிமாணிக்கம், திமுக 1989 சிங்காரவடிவேல், காங் பழனிமாணிக்கம், திமுக 1991
துளசி அய்யா வாண்டையார், காங்
பழனிமாணிக்கம், திமுக
1996

பழனிமாணிக்கம், திமுக துளசி அய்யா வாண்டையார், காங்
1998 பழனிமாணிக்கம், திமுக எல்.கணேசன், மதிமுக 1999
பழனிமாணிக்கம், திமுக
தங்கமுத்து, அதிமுக
2004 பழனிமாணிக்கம், திமுக
தங்கமுத்து, அதிமுக 2009 பழனிமாணிக்கம், திமுக துரை பாலகிருஷ்ணன், மதிமுக 2014
பரசுராமன், அதிமுக டி.ஆர்.பாலு, திமுக 2019
பழனிமாணிக்கம், திமுக நடராஜன் N. R, த.மா.கா

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 2 முறையும் காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2019-ம் ஆண்டு தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

கட்சி வேட்பாளர் திமுக முரசொலி அதிமுக சிவநேசன் (தேமுதிக) பாஜக M. முருகானந்தம் நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்