ஈரோடு மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணித மேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயர்களும் உண்டு. 2008-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது, திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதிலிருந்து சில தொகுதிகளை எடுத்தும், புதிய தொகுதிகளைச் சேர்த்தும் ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

பவானி சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், பாசனத்துக்கு ஆதாரமாக உள்ளது. குடிநீருக்கு ஆதாரமாக இருப்பது காவிரி ஆற்று நீர். ஈரோட்டில் நெல், மஞ்சள், நிலக்கடலை, கரும்பு, வாழை, மரவள்ளி ஆகியவை முக்கியப் பயிர்களாக இருக்கின்றது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித் துறை சார்ந்த தொழில்கள் இங்கு உள்ளன. ஈரோடு ஜவுளிச் சந்தையைச் சார்ந்து, சிறிய மற்றும் மொத்த ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர்கள், சாய, சலவைத் தொழில் செய்பவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திருச்செங்கோடு தொகுதியைப் பொறுத்தவரை 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.கே.பேபி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வென்றுள்ளது. 1967 முதல் 1998 வரை அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றிபெற்றுள்ளன. 1998 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு வென்றவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின், 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தோற்கடித்து மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் மதிமுக சார்பில் வென்ற ஒரே வேட்பாளர் அவர்தான்! இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

ஈரோடு தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,28,241

ஆண் வாக்காளர்கள்: 7,40,298
பெண் வாக்காளர்கள்: 7,87,762
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:181

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:


ஆண்டு
வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர் 2009 A.கணேசமூர்த்தி, மதிமுக
E.V.K.S. இளங்கோவன், காங்கிரஸ் 2014
S. செல்வகுமார சின்னையன், அதிமுக A.கணேசமூர்த்தி, மதிமுக 2019 A.கணேசமூர்த்தி, திமுக ஜி.மணிமாறன், அதிமுக

2019-ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்