கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுடன், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது கரூர் மக்களவைத் தொகுதி. 4 மாவட்டங்களில் பரவிக் கிடப்பதால் மிகப்பெரிய தொகுதியாகவே காட்சி அளிக்கிறது.

காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளைக் கொண்ட இந்தப் பகுதியின் முதன்மையான தொழில் விவசாயம். கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கிய தொழில். மாட்டுக்கு மட்டுமின்றி முறுக்குக்கும் பெயர் பெற்ற மணப்பாறை இந்தத் தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது.

மக்களவைத் துணைச் சபாநாயகர் தம்பிதுரை பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி பழனிசாமி எனப் பிரபலமான வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் காண்கின்றனர். திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே இந்த பகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். அதிமுக, திமுக என இருகட்சிகளுக்குமே செல்வாக்கு மிக்க தொகுதி இது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

• கரூர்
• கிருஷ்ணராயபுரம் (தனி)
• அரவக்குறிச்சி
• வேடசந்தூர்
• மணப்பாறை
• விராலிமலை

கரூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,21,494
• ஆண் வாக்காளர்கள்: 6,89,900
• பெண் வாக்காளர்கள்: 7,31,502
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 92

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:


ஆண்டு
வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்
1971
கோபால், காங்கிரஸ் ராமநாதன், ஸ்தாபன காங்கிரஸ்
1977
கோபால், காங்கிரஸ்
மீனாட்சி சுந்தரம், ஸ்தாபன காங்கிரஸ்
1980

துரை செபாஸ்டின், காங்கிரஸ்
கனகராஜ், அதிமுக
1984
முருகையா, காங்கிரஸ் கந்தசாமி, திமுக
1989 தம்பிதுரை, அதிமுக
கே.சி பழனிசாமி, திமுக
1991
முருகேசன், அதிமுக
திருநாவுக்கரசு, திமுக
1996 நாட்ராயன், தமாகா தம்பிதுரை, அதிமுக 1998 தம்பிதுரை, அதிமுக
நாட்ராயன், தமாகா
1999 சின்னசாமி, அதிமுக
கே.சி பழனிசாமி, திமுக
2004 கே.சி பழனிசாமி, திமுக ராஜா பழனிசாமி, அதிமுக
2009
தம்பிதுரை, அதிமுக
கே.சி பழனிசாமி, திமுக
2014
தம்பிதுரை, அதிமுக
சின்னசாமி, திமுக 2019 ஜோதிமணி S, காங்கிரஸ் தம்பிதுரை M, அதிமுக


2019-ம் ஆண்டு கரூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு கரூர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்