நாமக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நீண்டகாலம் தனித் தொகுதியாக இருந்த ராசிபுரம் தொகுதி மறுசீரமைப்பின்போது பொதுத் தொகுதியாக மாறியது. ராசிபுரம் தொகுதிக்கு பதிலாக மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ள புதிய மக்களவைத் தொகுதி இது. நாமக்கல் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதியையும் இணைத்து புதிய மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையின் பரமத்திவேலூர் முதல் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியையான சேர்ந்த மங்கலம் வரை இந்தத் தொகுதி பரவியுள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காவிரி கரையையொட்டிய பகுதி என்பதால் நெல், கரும்பு என பாரம்பரிய விவசாயம் நடைபெறும் பகுதி. விவசாயத்தை தவிர கோழிப்பண்ணை முக்கிய தொழில். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுவதால் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதிகளில் அதிகமாக லாரி சார்ந்த தொழில் நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த லாரிகள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமே இயக்கப்படுகின்றன. சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவதில் நாமக்கல் பகுதி லாரிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு.

குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே செல்வாக்கு என்றில்லாமல் பல கட்சிகளும் இந்தத் தொகுதியில் முத்திரைப் பதித்துள்ளன. தொடக்க காலத்தில் காங்கிரஸ் அதிகமாக வென்றுள்ளது. இருப்பினும் சமீப காலத்தில் அதிமுக, திமுகவுக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவியுள்ளது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

நாமக்கல்
சங்ககிரி
திருச்செங்கோடு
பரமத்திவேலூர்
ராசிபுரம் (தனி)
சேர்ந்தமங்கலம் (தனி)

நாமக்கல் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,44,036

ஆண் வாக்காளர்கள்: 7,04,270
பெண் வாக்காளர்கள்: 7,39,610
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:156

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்

ராசிபுரம் தொகுதி (தனித்தொகுதி)

ஆண்டு
வெற்றி பெற்றவர்
2ம் இடம் பெற்றவர்
1977 தேவராஜன், காங் ஜோதி வெங்கடாச்சலம், ஸ்தாபன காங்
1980 தேவராஜன், காங் அன்பழகன், அதிமுக
1984 தேவராஜன், காங் துரைசாமி, திமுக
1989 தேவராஜன், காங் மாயவன், திமுக
1991 தேவராஜன், காங் சுகன்யா, திமுக
1996
கந்தசாமி, தமாகா ஜெயகுமார், காங்
1998
சரோஜா, அதிமுக கந்தசாமி, தமாகா
1999
சரோஜா, அதிமுக உதயரசு, பாமக
2004 ராணி, காங் அன்பழகன், அதிமுக


நாமக்கல் (பொதுத்தொகுதி)


ஆண்டு வெற்றி பெற்றவர்
2ம் இடம் பெற்றவர்
2009 காந்திசெல்வன், திமுக வைரம் தமிழரசி, அதிமுக
2014 பி.ஆர்.சுந்தரம், அதிமுக காந்திசெல்வன், திமுக
2019 ஏ.கே.பி சின்ராஜ், திமுக பி.காளியப்பன், அதிமுக


2019-ம் ஆண்டு நாமக்கல் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு நாமக்கல் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்