திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மாவட்ட தலைநகரின் பெயரில் திருவண்ணாமலை தொகுதியாக மாறியுள்ளது. பெருமளவு கிராமப்புற பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதி, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளையும் உள்ளடக்கியது. குறிப்பிட்ட இந்தப் பகுதிகளில் விவசாயம் பிராதன தொழிலாக இருக்கும் நிலையில், பல தொழிலாளர்களாக சென்னைக்கும், பெங்களூருக்கும் செல்லும் நிலை உள்ளது. ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாகப் புகாருக்குள்ளாகும் ஜவ்வாது, ஏலகிரி மலைகளில் சில பகுதிகளும் இந்தத் தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளன.

முந்தைய திருப்பத்தூர் தொகுதி, பல ஆண்டுகளாக திமுக வலிமையாக இருந்தது. திமுகவின் சார்பில் வேணுகோபால் பலமுறை இந்தத் தொகுதியில் வென்றிருக்கிறார். இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை
கீழ்பெண்ணாத்தூர்
கலசபாக்கம்
திருப்பத்தூர்
செங்கம் (தனி)

திருவண்ணாமலை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 1521787
ஆண் வாக்காளர்கள்: 7,49,000
பெண் வாக்காளர்கள்: 7,72,669
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:118

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

திருப்பத்தூர் தொகுதி:

ஆண்டு வெற்றி பெற்றவர் 1977
விஸ்வநாதன், திமுக
1980
முருகையன், திமுக

1984 ஜெயமோகன், காங்
1989 ஜெயமோகன், காங்
1991 ஜெயமோகன், காங்
1996
வேணுகோபால், திமுக
1998
வேணுகோபால், திமுக
1999
வேணுகோபால், திமுக
2004 வேணுகோபால், திமுக


திருவண்ணாமலை தொகுதி:

ஆண்டு
வெற்றி பெற்றவர் 2ம் இடம் பெற்றவர் 2009
தனபால் வேணுகோபால், திமுக குரு, பாமக 2014 வனரோஜா, அதிமுக
அண்ணாதுரை, திமுக
2019 சி. என். அண்ணாதுரை, திமுக

எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கத்துக்குப் பின் திமுக 2 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளது.

2019-ம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE