திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

By செய்திப்பிரிவு

கடந்த 2009-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பின்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக தலைநகரை நோக்கி மக்கள் வந்தவண்ணம் இருப்பதால், சென்னையின் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், உயர்ந்து வரும் மக்கள் தொகை அடிப்படையில் சென்னையில் தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன. அப்போது புதிதாக உருவான தொகுதிதான் திருவள்ளூர்.

1950-களில் திருவள்ளூர் பெயரில் மக்களவைத் தொகுதி இருந்துள்ளது. ஆனால், அப்போது இருந்த திருவள்ளூர் தொகுதியும், அதனுள் இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகளும் வேறானாவை. 2009-ம் ஆண்டு தனித் தொகுதியாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர் மக்களவை தொகுதி, சென்னை நகரின் சில பகுதிகளையும், புறநகர் பகுதிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கும்மிடிபூண்டி, பொன்னேரி தவிர மற்ற பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம். இவற்றில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும்தான் இந்தத் தொகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ கும்மிடிபூண்டி
⦁ பொன்னேரி (தனி)
⦁ திருவள்ளூர்
⦁ பூந்தமல்லி (தனி)
⦁ ஆவடி
⦁ மாதவரம்

திருவள்ளூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,58,098
ஆண் வாக்காளர்கள்: 10,10,968
பெண் வாக்காளர்கள்: 10,46,755
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:375

முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர்

2-ம் இடம் பிடித்தவர்

1951 மரகதம் சந்திரசேகர், காங் கோவிந்தசாமி, சுயேச்சை 1951 நடேசன், காங் சரோஜனி, கேஎம்பிபுஇ 1956 ஆர்.ஜி நாயுடு, காங் ராஜமன்னார், சுயேச்சை 1957 கோவிந்தராஜூலு நாயுடு, காங் ராகவ ரெட்டி, சுயேச்சை 1962 கோவிந்தசாமி நாயுடு, காங் கோபால், திமுக 2009 வேணுகோபால், அதிமுக காயதிரி, திமுக 2014 வேணுகோபால், அதிமுக ரவிக்குமார், விசிக 2019 ஜெயக்குமார், காங்கிரஸ் வேணுகோபால், அதிமுக

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் 6 முறையும், அதிமுக இரு முறை என அதிகமுறை வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

2019-ம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நிலவரம்:

2024-ம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்