இஸ்ரேலின் தாக்குதல்: இந்திய நிலைப்பாட்டில் வரவேற்கத்தக்க மாற்றம்

By செய்திப்பிரிவு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்கிற உலகளாவிய குரலில் இந்தியாவும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலுக்கு எதிர்வினையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இரண்டு மாதங்களாகத் தொடரும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் ஐ.நா. பொது அவையின் புதிய தீர்மானத்துக்கு 152 நாடுகளுடன் இந்தியாவும் ஆதரவளித்துள்ளது. ஐந்துக்கு நான்கு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் டிசம்பர் 12 அன்று நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், காசாவில் உடனடிப் போர்நிறுத்தம், சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் பின்பற்றப்படுதல், பணயக் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுவித்தல், மனிதநேயச் சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE