கோவை தனியார் பொறியியல் கல்லூரியின் தங்கும் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர், மூத்த மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட்டு ‘ராகிங்’ செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு மாணவர் ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்து மூன்று மாத கால இடைவெளியில், மீண்டும் ஒரு கொடுமை நடந்திருப்பது, இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் நிலவும் போதாமைகளை வெளிப்படுத்துகிறது.
கல்வி நிறுவனத்தில் புதிதாகச் சேரும் இளம் மாணவர்களை மூத்த மாணவர்கள் சீண்டுவது, அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது, இயல்புக்கு மாறான செயல்களைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை ‘ராகிங்’ என்பதன் வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ‘ராகிங் தடுப்புப் பிரிவு’ வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2021இல் மட்டும் நாடு முழுவதும் 511 ராகிங் கொடுமைகள் பதிவாகியிருக்கின்றன. 35.1% மாணவர்கள் சிறிய அளவிலாவது ராகிங்கை எதிர்கொண்டிருக்கின்றனர். 4.1% பேர் கடுமையான ராகிங் கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago