நோபல் 2023 - அமைதி | அமைதிக்கான நோபல் பரிசு: விடை கோரும் கேள்விகள்

By ச.தமிழ்ச்செல்வன்

2023 க்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி நர்கிஸ் மொகம்மதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது ஈரான் நாட்டின் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் ஆளுமைகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1935 இல் ஜெர்மானியப் பத்திரிகையாளர் கார்ல் வொன் அஸ்ஸிட்ஸ்கி (Carl Von Ossietzky) ஹிட்லரின் ஆட்சியில் சிறையில் இருந்தார். அப்போது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

சிறையில் விருதாளர்கள்: 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு மயன்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்தே தன் நோபல் உரையை அவர் ஆற்ற முடிந்தது. பின்னர் அவரது நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. வெளிநாட்டுக்காரரை மணந்தவர் என்பதால், அவரால் பிரதமராக முடியவில்லை. எ

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE