இடையிலாடும் ஊஞ்சல் - 24: துக்க நாள் அல்ல... என்றாலும் துக்கமாயிருந்தது!

By ச.தமிழ்ச்செல்வன்

இந்த ஆண்டு சுதந்திர தினம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமக்கு மனஅழுத்தம் தந்த தினமாகக் கடந்து சென்றது. தேசியக் கொடியை ஏற்றிவிட்டு ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் பொய்களும் வெட்டிப் பெருமிதப் பீற்றல்களும் நம் மக்களுக்குப் புதியதல்ல; ஆகவே, அது காரணமல்ல. பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசியாக வேண்டும்.

கவலையளிக்கும் நிகழ்வுகள்: பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பழக்கமில்லாத பிரதமரை, நாடாளுமன்றத்தில் பொறுப்பாக உட்கார்ந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியும் பழக்கமில்லாத பிரதமரை வம்படியாக இழுத்துவந்து இரண்டேகால் மணிநேரம் பேசவைத்தார்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

ஆனாலும் அவர் இரண்டு மணி நேரம் மணிப்பூரைப் பற்றிப் பேசாமல், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து கட்சி மேடையில் பேசுவதுபோலப் பேசிக்கொண்டே இருக்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அதற்குப் பிறகு ஒரு 15 நிமிடங்கள் மணிப்பூரின் மகள்களைக் காக்க (எதிர்பார்த்தபடி) உறுதிபூண்டு சூளுரைத்தார் பிரதமர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE