தமிழ் கட்டாயப் பாடமானால் போதுமா?

By மகா.இராஜராஜசோழன்

தமிழ்நாட்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்கிற சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி, 2015–16 கல்வியாண்டில் அனைத்து விதமான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17 கல்வி ஆண்டில் 2ஆம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாகப் படிப்படியாக அமலானது.

அதன்படி 2022–23 கல்வியாண்டில், 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடை முறைக்குவந்தது. இந்நிலையில், 2023–24 கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு வரையும், 2024–25 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரையும் தமிழ்ப் பாடம் கட்டாயமாகிறது. இது மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ உள்பட அனைத்துவிதப் பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால், பல தனியார் பள்ளிகள், குறிப்பாக மத்திய அரசுப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE