திண்ணை: பப்ளிஷிங் நெக்ஸ்ட் விருதுகள்

By செய்திப்பிரிவு

சிறந்த அச்சுப் புத்தகம், சிறந்த அட்டை வடிவமைப்பு போன்ற பல பிரிவுகளில் ஆண்டுதோறும் பப்ளிஷிங் நெக்ஸ்ட் அமைப்பு (Publishing Next) பரிசு வழங்கிவருகிறது. இந்தாண்டு சிறந்த இந்திய மொழிகளுக்கான முதல் பரிசு ஹார்பர் காலின்ஸ் வெளியிட்ட ‘மகாபாரத்’ இந்தி நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பக வெளியீடான பெஞ்சமின் சூல்ட்சேயின் ‘மெட்ராஸ் 1726’ (பதிப்பு, மொழிபெயர்ப்பு, ஆய்வுக் குறிப்புகள் க. சுபாஷிணி ) தமிழ் நூல் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது. ‘பசித்த மானுடம்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Hungry Humans’ புத்தகம் சிறந்த அட்டை வடிவமைப்புக்கான பரிசை வென்றுள்ளது. வடிவமைப்பு, ஆகாங்ஷா சர்மா.

கோ.கேசவன் உரையரங்கம்

பட்டாபிராம் இந்துக் கல்லூரியும் கோ.கேசவன் அறக்கட்டளையும் இணைந்து விமர்சகர் கோ.கேசவன் எழுத்துகள் குறித்த உரையரங்கத்தை வரும் புதன்கிழமை (08.03.2023) அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்துக் கல்லூரியின் கண்ணன் அரங்கத்தில் ஒருங்கிணைத்துள்ளன. பேராசிரியர்கள் வீ.அரசு, மு.சுதந்திரமுத்து, இரா.ராமன், எழுத்தாளர் செல்வ புவியரசன் ஆகியோர் பேசவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE