அதென்ன 'பேலியோ டயட்'? ஆதி மனிதர்களின் உணவு முறை. அவர்களின் உணவு முறை இன்று நாம் பின்பற்றும் மூன்று வேளை உணவு முறையைப் பின்பற்றவில்லை. எப்போது சரியான இரை சிக்குகிறதோ, அப்போது வேட்டையாடி, அன்று மட்டும் வயிறார ஆதிமனிதர்கள் உண்டார்கள். தவிர, அவர்கள் உண்டது எல்லாமே பெரும்பாலும் இறைச்சி உணவுகள்தான்.
ஆனால், இப்போது உள்ள அளவுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எல்லாம் அவர்களுக்கு ஏற்படவில்லை. விஞ்ஞானமும் மருத்துவமும் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில்தான் மேற்கொண்ட நோய்கள் அதிக அளவுக்கு ஏற்படுகின்றன. அதற்கான மூல காரணம், ஆதி மனிதர்களின் உணவு முறையை நாம் கைவிட்டதுதான் என்று ஏராளமான வாதங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பது குறித்துச் சொல்லப்படுபவையெல்லாம் எவ்வளவு தவறானவை என்பதையும் இந்தப் புத்தகம் கூறுகிறது. இரு வேளை உணவு என்பது போர் வீரர்களுக்குச் சக்தியளிக்கும் 'வாரியர் டயட்' போன்றதாகும் என்று சொல்லும் இந்தப் புத்தகம், மருத்துவரீதியாக எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டது என்பதைத் தாண்டி, 'பேலியோ டயட்' முறையில் என்ன வகையான உணவை எப்போது, எப்படிச் சாப்பிடலாம் என்றும் குறிப்பிடுகிறது.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் குறித்து மருந்து நிறுவனங்களும், உணவு நிறுவனங்களும், உடற்பயிற்சி நிறுவனங்களும் ஏற்படுத்தும் அதீத பயம், தங்கள் விற்பனையை உயர்த்துவதற்காக அந்த நிறுவனங்கள் செய்யும் ஜாலங்கள் ஆகியவற்றையும் நூலாசிரியர் அலசுகிறார்.
நூலாசிரியர் நியாண்டர் செல்வன், இந்த உணவு முறையைப் பின்பற்றித் தனது எடையைக் குறைத்ததோடு அல்லாமல், சர்க்கரை அளவு போன்றவற்றை 'நார்மலான' அளவுக்குக் கொண்டுவந்தது எப்படி என்பதையும் பகிர்ந்துகொள்கிறார். மேலும் இந்த உணவு முறையைப் பின்பற்றிய சிலரின் கருத்துகளும் பேட்டிகளும் புத்தகத்தில் அடங்கியுள்ளன. இவற்றால் இந்த உணவு முறையின் மீது ஒரு நம்பகத்தன்மை ஏற்படுகிறது. புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, 'இது 'பழைய' சாதம் அல்ல!' என்று உணரவைக்கிறது பழமையான இந்த உணவு முறை.
பேலியோ டயட்: ஆதி மனிதன் உணவுமுறை
நியாண்டர் செல்வன்
விலை: ரூ. 150
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை-14.
தொடர்புக்கு: 044- 4200 9603, மின்னஞ்சல்: support@nhm.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
22 hours ago
இலக்கியம்
22 hours ago
இலக்கியம்
22 hours ago
இலக்கியம்
22 hours ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago