21-ம் நூற்றாண்டின் உலக இலக்கியம், ஒரு கைப்பிடி

By செய்திப்பிரிவு

உலக இலக்கியம் என்பது மகா சமுத்திரம். ஒரு மனித ஆயுள் என்பது அதற்கு முன் ஒரு நாழிகை. உலக இலக்கியத்தின் வாசகர்கள் எல்லோரும், எவ்வளவு வேகமாக வாசித்தாலும், எவ்வளவு தேர்ந்தெடுத்துப் படித்தாலும், தான் வாசித்ததை விடப் பலமடங்கு நூல்களை வாசிக்க முடியாத வருத்தத்தை மனதிலிறுத்திக்கொண்டே இறுதி மூச்சை நிறுத்தப்போகிறார்கள். 21-ம் நூற்றாண்டு உலக இலக்கியத்தை ஒரு கட்டுரையில் கொண்டுவர முடியாது. கங்கையில் சேந்திய நீர், கங்கையைக் கொண்டுவந்தோம் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதுபோல இது ஒரு உருவரைக் குறிப்பு... அவ்வளவே.

அரபு இலக்கியம் உலக கவனத்தைக் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகப் பெற்றுவருகிறது. இன்றுவரை இலக்கியத்திற்கான ஒரே ஒரு நோபல், ஒரே ஒரு புலிட்சர் விருதைத்தான் அரபு இலக்கியம் பெற்றுள்ளது. அநேகமாக, எல்லோருமே ஆண் எழுத்தாளர்கள். இந்தக் குறையை அடனியா ஷிப்லி (Adania Shibli) எழுதிய ‘Minor Detail’ என்ற நூல் தீர்த்துவைத்தது. ‘நேஷனல் புக் அவார்டு’, ‘புக்கர்’ என்று இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்ற நூல். ஒரு பெண்ணின் பாலியல் வல்லுறவிலிருந்து பாலஸ்தீனத்தின் கதையைச் சொல்லும் நாவல். இதைத் தொடர்ந்து பல பெண்கள், குறிப்பாக வெளிநாடுகளில் குடியேறிய பெண்கள், சின்ன வட்டத்திலிருந்து அரபு இலக்கியத்தை உலக இலக்கிய மையநீரோட்டத்தில் கலக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE