நல்வரவு: உவர் மணல் சிறுநெருஞ்சி

By செய்திப்பிரிவு

சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது.

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 600 078, விலை: ரூ.130,
தொடர்புக்கு: 99404 46650

பிழை செய்யும் கணவனை மன்னித்து, அன்புடன் அவனை ஏற்றுக்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் மனைவியின் கதையை நவீன கண்ணகியாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். இந்நாவலில் ஒவ்வொரு பத்தியின் ஒவ்வொரு வரியும் ஒரே எழுத்தோசையுடன் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம்.

கண்ணகி கோட்டை, ஜோஜ்
வெளியீடு: ஜலோ பப்ளிகேஷன்ஸ், திருச்சி - 620 008
விலை: ரூ.900, தொடர்புக்கு: 97892 16624

அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியரான நூலாசிரியர் தன் பெயர்த்திக்குக் கதைகள் சொல்வதற்காக நிறைய சிறார் கதைகளைப் படித்து, அதன் மூலம் தானே சிறார் கதைகளைப் படைக்கத் தொடங்கினார். அப்படி அவர் இயற்றிய 16 சிறார் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சிறாருக்கான நீதிக் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது.

சுட்டிக் கதைகள், நீலாவதி
வெளியீடு: சுருதிலயம், சென்னை-88
விலை: ரூ.125, தொடர்புக்கு: 94441 24285

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது.

வானவில், வாண்டா வாஸிலெவ்ஸ்கா
தமிழில்: ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன்
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், சென்னை-89
விலை: ரூ.240, தொடர்புக்கு - 98417 75112

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் முழு விவரங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களின் பணிகள், கடமைகள் உள்ளிட்ட விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்
மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்
வடகரை செல்வராஜ்,
வெளியீடு: ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24
விலை: ரூ.560, தொடர்புக்கு: 87545 16289


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்