நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், சினிமா என பல தளங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முதல் சிறார் நாவல் இது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் ஊரடங்குக் கட்டுப்பாடுகள், மருத்துவப் பணிகள் போன்றவை குழந்தைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விவரிக்கிறது இந்த நாவல்.
கொரோனா தடுப்பூசி, சுப்ரபாரதிமணியன்,
வெளியீடு: லாவண்யா புத்தகாலயம்,
வேலூர்- 632 001, விலை: ரூ.50, தொடர்புக்கு: 63801 54198
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்பட்ட கவிஞர் சுரதா குறித்து அவரை முன்னோடியாகப் போற்றும் கவிஞர்களும், சொற்பொழிவாளர் தென்கச்சி சுவாமிநாதன், டாக்டர் கு.கணேசன் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
நெஞ்சில் மோதும் நினைவுகள்: சுரதா அன்பர்களின் கட்டுரைகள்
தொகுப்பு: இ.சாகுல் அமீது, வெளியீடு: பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை - 635 851
விலை: ரூ.220, தொடர்புக்கு: 72006 93200
சூலூர் கலைப்பித்தன், நடிகர் சிவகுமார் நடித்த ‘சாட்டையில்லாத பம்பரம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர், ‘பசும்பொன் தெய்வம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர், ‘தீரன் சின்னமலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். இவர் தன்னுடைய கலையுலக அனுபவங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் இந்த சுயசரிதை நூலில் பதிவுசெய்துள்ளார்.
சினிமா எனது உயிர், சூலூர் கலைப்பித்தன்
வெளியீடு: சூலூர்த் தமிழ்ச் சங்கம்-கலைப்பித்தன் கலை இலக்கிய இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, விலை: ரூ.200,
தொடர்புக்கு: 94424 83066
மிகத் தொன்மையான கிரேக்க சமூகத்தில் மக்கள் வழிபட்ட கடவுளர்கள், அச்சமூகத்தில் உருவான தொன்மங்கள், கதைகள், இதிகாசக் கதாபாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தும் நூல். இந்தியத் தொன்மங்களுக்கும் கிரேக்கக் கதைகளுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
கிரேக்க இதிகாசக் கதைகள். ஏவி.எம்.நஸீமுத்தீன்.
வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை - 600 017.
விலை: ரூ.170, தொடர்புக்கு: 94440 47786
சுதேசிக் கப்பல் வணிகத்தைத் தொடங்கி, ஆங்கிலேய ஆட்சியாளர்களை மிரளவைத்த ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் எழுதிய சுயசரிதை முல்லை பதிப்பகம் மூலம் 1946-ல் வெளியிடப்பட்டது. அது இப்போது மீண்டும் மறுபதிப்பு கண்டுள்ளது. கலப்பற்ற தூயதமிழில் தன் வாழ்க்கைக் கதையைப் பதிவுசெய்துள்ளார் வ.உ.சி. தற்கால வாசகர்களின் புரிதலுக்காகப் புழக்கத்தில் இல்லாத சொற்களுக்கான பொருள் அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
சுயசரிதை, வ.உ.சி., வெளியீடு: முல்லை பதிப்பகம்,
சென்னை - 600 040, விலை - ரூ.120, தொடர்புக்கு: 98403 58301
முக்கிய செய்திகள்
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago