உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - மக்களும் மரபுகளும்

By செய்திப்பிரிவு

தமிழில் பண்பாட்டு மானிடவியல் குறித்து வெளியான முன்னோடிப் புத்தகங்களில் இதுவும் ஒன்று. நா.வானமாமலையின் ‘ஆராய்ச்சி’ இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. வேலன் வழிபாடு, கண்ணகி வழிபாடு குறித்து பி.எல்.சாமி எழுதிய இரண்டு கட்டுரைகளும் முக்கியமானவை.

கோத்தர்கள், பளியர்கள், வாக்ரிகள் (நரிக்குறவர்கள்), இருளர், கசவா, கொடவர் ஆகிய பழங்குடி இனக்குழுக்களைப் பற்றிய கோ.சுப்பையா, ஆ.சிவசுப்பிரமணியன், ஆர்.பெரியாழ்வார் உள்ளிட்ட மற்ற அறிஞர்களின் கட்டுரைகள் விரிவான கள ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடியினரின் வாழ்க்கையை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பதிவுசெய்திருப்பதோடு, அவர்களுடைய முன்னேற்றத்துக்கான அக்கறையையும் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.

மக்களும் மரபுகளும்
பதிப்பாசிரியர்: நா.வானமாமலை
என்சிபிஎச் வெளியீடு
விலை: ரூ.100

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE