உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி

By செய்திப்பிரிவு

நிகண்டுகள், கதிரைவேற்பிள்ளை அகராதி, தமிழ் லெக்சிகன் போன்ற மரபில் மிக முக்கியமான அகராதிகளுள் இதுவும் ஒன்று. கி.பி. 1600 வரையில் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கும் 70,814 சொற்களுக்கு இந்தப் பேரகராதியில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, அந்தச் சொல் முதன்முறையாக இடம்பெற்ற இலக்கியத்திலிருந்தும் மேற்கோள் கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் பயனுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சந்தி பிரித்த வெளியீடுகளைக் கொண்டுவந்த மர்ரே ராஜம் முயற்சிகளின் மகத்தான தொடர்ச்சி இது! அவசியம் வாங்க வேண்டிய நூல்.

வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி (5 தொகுதிகள்)
* சாந்தி சாதனா வெளியீடு. * விலை: ரூ.2,000

தற்போது நடந்துகொண்டிருக்கும் 45-வது சென்னை புத்தகக்காட்சியையொட்டி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் சிறப்புப் பகுதிகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்னை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் இந்தச் சிறப்புப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். நூல்களை அனுப்புவோர் இரண்டு பிரதிகளை
அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்