ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே மிகவும் நைந்துபோயிருக்கும் உறவில் இலக்கியம்தான் சிறிது இணைப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அவ்வகையில் ரிஷான் ஷெரீஃப் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூல்கள் குறித்துத் தொடர்ந்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் கவனப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இப்போது தமிழ்ச் சிறுகதைகள் சிங்களத்துக்குச் செல்கின்றன. சயந்தன், ஷோபாசக்தி, தமிழ்நதி, அனோஜன் பாலகிருஷ்ணன், தாட்சாயணி, ஜேகே, ஜிஃப்ரி ஹாஸன், சக்கரவர்த்தி ஆகியோரின் கதைகள் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘அதிஷய அபியந்தர பரீக்ஷனய’ (மிக உள்ளக விசாரணை) என்ற தலைப்பில் தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.
மொழிபெயர்த்திருப்பவர் ஜெகன் கணேசன். இந்த நூலை எழுத்தாளர் சயந்தனின் ‘ஆதிரை’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சயந்தனிடம் பேசியபோது, “நூறாண்டுகளுக்கும் மேலான இனரீதியான முறுகல்களை, முரணை இவ்வாறான இலக்கிய முயற்சிகள் தணித்தோ தீர்த்தோ விடாது. ஆயினும், நியாயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு நம்பிக்கையான அரங்கை முதலில் காயங்களைப் பகிர்ந்துகொண்டு கட்டியெழுப்ப இயலும். அவற்றைக் கரிசனையோடு உள்வாங்கக் கூடிய உணர்ந்துகொள்ளக் கூடிய ஒரு தரப்பினர் சிங்கள மக்களிடையே சிறிய அளவிலேனும் உண்டு. அவர்களோடு இணைந்து நின்று நம் பிரச்சினையை எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையின் விளைவுதான் இவ்வாறான முயற்சிகள். இருப்பினும், இவ்வாறான இன இணக்க முயற்சிகளை - புலிப் பிரச்சாரமாக பூதாகாரப்படுத்தக்கூடிய பேரினவாதச் சிந்தனையும், அதற்கு ஆதரவு வழங்கக்கூடிய சட்ட இறுக்க நடைமுறைகளும் அங்கு உண்டு என்பதால், தயக்கத்தோடும் அவதானத்தோடும்தான் இப்படியான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது” என்றார். இதுபோன்று மேலும் பல முயற்சிகள் தொடர வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago