360: வண்ணதாசனுக்குக் காணிநிலம்!

By செய்திப்பிரிவு

மனுஷும் 1,798 கவிதைகளும்!

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒருவிதத்தில் ஆச்சரியப்படுத்துவார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். கடந்த ஆண்டு 1,700 கவிதைகளை மூன்று பெரும் தொகுப்புகளாக வெளியிட்டார். அதற்கு முந்தைய ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட கவிதைகளை 11 தொகுப்புகளாக வெளியிட்டார். இந்த ஆண்டு 1,798 கவிதைகளும் 2,288 பக்கங்களும் கொண்ட பெருந்தொகுப்பு. ‘மிஸ் யூ… இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது’ என்பது இந்தப் புத்தகத்தின் தலைப்பு. இந்தத் தலைப்பு சில நாட்கள் சமூக ஊடகத்தில் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருந்தது. ரூ.2,750 கொண்ட இந்தப் புத்தகம் சலுகை விலையில் ரூ.2,000-த்துக்குக் கிடைக்கும் (20-01-2022 வரை மட்டுமே). தொடர்புக்கு: 9003218208.

சலுகை விலையில் புத்தகங்கள்

பதிப்பாளர்கள் பலரும் சென்னை புத்தகக்காட்சிக்காகக் கடும் உழைப்பைச் செலுத்தி ஏராளமான புத்தகங்களைத் தயார்செய்துகொண்டிருந்த நேரத்தில் கரோனா பரவல் தீவிரமானதால் புத்தகக்காட்சி தள்ளிப்போடப்பட்டது. எனினும், பதிப்பாளர்கள் மனம் தளர்ந்துவிடவில்லை. பல பதிப்பகங்கள் தங்கள் நூல்களுக்குச் சலுகை விலை அறிவித்து வாசகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. எதிர் வெளியீடு, காலச்சுவடு, டிஸ்கவரி புக் பேலஸ், நற்றிணை, பாரதி புத்தகாலயம், யாவரும் பதிப்பகம், ஸீரோ டிகிரி பப்ளிஷிங் உள்ளிட்ட பல பதிப்பகங்கள் 20-50% வரை தள்ளுபடி அறிவித்திருக்கிறார்கள். புத்தகக் காதலர்கள் இந்தத் தள்ளுபடியைப் பெருமளவில் பயன்படுத்திக்கொண்டால் புத்தக உலகம் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளும்!

வண்ணதாசனுக்குக் காணிநிலம்!

வண்ணதாசன் 75 வயதைக் கடந்ததைச் சிறப்பிக்கும் வகையில் ‘காணிநிலம்’ காலாண்டிதழ் வண்ணதாசன் சிறப்பிதழாக வெளிவரவிருக்கிறது. வண்ணநிலவன், சுகா, கவிதா ஜவஹர், நாறும்பூநாதன், சௌந்தர மகாதேவன் உள்ளிட்டோர் இந்த இதழில் பங்களித்திருக்கிறார்கள். வண்ணதாசனுடனான கலந்துரையாடல் இந்த இதழின் சிறப்பு. இதழ் தொடர்புக்கு: 9944229479.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்