இந்திய நீதித் துறையின் முதன்மையான பிரச்சினை என்பது தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அல்ல, சட்டம் குறித்த அடிப்படை அறிவு மக்களிடம் போய்ச் சேர்க்கப்படாததுதான். உண்மை யில் சட்டம் ஜனநாயகப்படுத்தப்படாததன் விளைவைத்தான் நீதியின் தள்ளாட்டமாக, பாரபட்சமாக நாம் உணர்கிறோம். சட்ட ஜனநாயகமயமாக்கலுக்காக நீதித் துறைக்குள் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது அயராது உழைத்த நீதிபதி கே.சந்துரு, பணி ஓய்வுக்குப் பின்னரும் தன்னுடைய கட்டுரைகள் வாயிலாகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
‘தி இந்து’ உள்பட பல்வேறு பத்திரிகைகளில் வெளியான சந்துருவின் கட்டுரைகளை அடங்கிய சமீபத்திய தொகுப்பு இது. வழக்கம்போல, நீதித் துறை, நீதிபதி, வழக்கறிஞர்கள், அரசு என அனைத்துத் தரப்புகளின் குறைகளையும் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சந்துரு கடுமையாகச் சாடியிருக்கிறார். அரசா, மக்களா என்றால், எபோதும் சந்துருவின் எழுத்துகள் மக்கள் பக்கமே நிற்கின்றன. அவருடைய ஆழ்ந்த வாசிப்பும் கள அனுபவங்களும் கட்டுரைகளில் புகும்போது அவர் தரப்பு வாதங்களை ஆணித்தரமாக நிறுவுவதோடு வேறொரு தளத்துக்கும் எடுத்துச் செல்கின்றன. சந்துரு இன்னும் நிறைய எழுத வேண்டும்!
- ஆசை
நீதிமாரே! நம்பினோமே!!
நீதிநாயகம் கே. சந்துரு
விலை: ரூ. 150
வெளியீடு: கவிதா பதிப்பகம், தி.நகர்,
சென்னை-17. தொடர்புக்கு: 044- 2436 4243,
kavitha_publication@yahoo.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago