இந்தியாவின் புகழ்பெற்ற ஒளிப்படக்காரர் ரகுராய், கடந்த ஐம்பது வருடங்களில் எடுத்த முக்கியமான ஒளிப்படங் களையும் அதற்குப் பின்னுள்ள கதைகளையும் புத்தகமாக (Picturing Time: The Greatest Photographs of Raghu Rai) வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்சானிடம் இளம்வயதில் வேலைக்குச் சேர்ந்த ரகு ராய், சுதந்திர இந்தியா கடந்த எத்தனையோ வரலாற்றுத் தருணங்களை யும் ஆளுமைகளையும் சாதாரண மனிதர்களை யும் படம்பிடித்திருக்கிறார். ரகு ராய் எடுத்த பல ஒளிப்படங்கள் எடுத்தவர் பெயர் தெரியாமலேயே நமது மனதில் பதிந்திருப்பவை. தனது ஐம்பது ஆண்டு கால ஒளிப்படப் பணியைத் தொகுத்துப் பார்க்கும் வண்ணம் 200 ஒளிப்படங்கள், அவற்றின் பின்னணித் தகவல்கள் ஆகியவற்றைச் சேர்த்து வெளியாகியிருக்கும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்தான்.
இப்புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் உள்ள ஒளிப்படத்தின் பின்னணி, இந்திய மக்களின் நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைச் சொல்கிறது. ராஜஸ்தான் பாணி தலைப்பாகை அணிந்த எண்ணற்ற மனிதர்களின் திரள் ஒரு புழுதிப் புயலில் சிக்கியது போல முகத்தை மூடித் தப்பிக்கும் காட்சிதான் அது. அந்தப் ஒளிப்படத்தின் பின்னணியையும் சமீபத்திய நேர்காணலில் ரகுராய் விளக்கியுள்ளார்.
1969-ல் ராஜஸ்தான் கடும் வறட்சியில் இருந்தபோது, மத்திய அரசு கொஞ்சம் நிதி ஒதுக்கியது. அந்த நிதி சரியாகச் சென்று சேரவில்லை என்பதால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நேரடியாகப் பார்வையிட்டு அந்த விஷயத்தில் தலையிட முடிவெடுத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் இறந்துபோன தகவல் வந்ததால், உடனடியாக ஹெலிகாப்டரில் பறந்துபோனார். இதனால் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த கிராமத்து மக்களுக்குக் கிடைத்ததோ வெறும் புழுதிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது ரகு ராயின் ஒளிப்படம். மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இன்றும் நிலவும் இடைவெளியை அப்பட்டமாகச் சொல்லும் ஒளிப்படம் இது.
இந்திரா காந்தி போன்ற பெரும் அரசியல் தலைவர்களை அவர்களது தனிப்பட்ட வெளிகளில் ஒளிப்படம் எடுத்தவர் ரகுராய். மலையின் விளிம்பு முகட்டில் நிற்கவைத்து, இமயமலைச் சிகரங்களைப் பார்த்தபடியிருக்கும் ஒளிப்படத்தை எடுக்கும் உரிமையை இந்திரா காந்தி ரகு ராய்க்கு வழங்கியிருக்கிறார். இன்றைய அரசியல் தலைவர்களை இப்படிப் ஒளிப்படமெடுப்பது சிரமம் மட்டுமல்ல, சாத்தியமான காரியமுமல்ல என்கிறார் ரகு ராய்.
கலைஞர்களையும் அழகியலையும் அரசியல் தலைவர்கள் புரிந்துகொண்ட காலம் ஒன்று இருந்ததென்று கூறுகிறார் ரகு ராய். அந்தரங்கமான இடங்களில் கலைஞர்களை இன்றைய தலைமுறைத் தலைவர்கள் அனுமதிப்பதில்லையென்பதையும் சுட்டிக்காட்டுகிறார். நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் பெரும்பகுதி ஒளிப்படங்கள் செய்தி நிலையங்களால் கையாளப்படும் ஒளிப்படக்காரர்களைக் கொண்டு எடுக்கப்படும் உயிர்ப்பற்ற ஒளிப்படங்கள் என்கிறார் அவர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago