சிறந்த சிறுகதையாசிரியர்களின் ஒருவர் அசோகமித்திரன். 1956-ம் ஆண்டு எழுதத் தொடங்கிய அசோகமித் திரனின் சிறுகதைகளுக்கு இது அறுபதாவது ஆண்டு. எளிமையையும் திறந்த நடையையும் வெளித் தோற்றமாகக் கொண்ட இவரது கதைகள் பொருளவில் கூர்மையானவை. அர்த்தத் தெறிப்புகளை வாக்கியங்களுக்கு இடையே செருகி வைத்திருக்கும் அசோகமித்திரனின் நடை, வாழ்க்கையைத் தருணங்களைக் கொண்டு அளந்து பார்ப்பவை.
எல்லைகளைத் தாண்டி உலகப் பொதுத்தன்மை பெற்று விரியும் இவரது கதைகள் சர்வதேசக் கதைகளுடன் ஓப்பிடத் தகுந்தவை. அசோகமித்திரன் சிறுகதைகளின் 60-வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் 1956-லிருந்து அவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பைக் காலச்சுவடு பாதிப்பகம் வெளியிடவுள்ளது. 1,632 பக்கங்களில் விரிவான பதிப்பாக வெளிவரவுள்ள இந்த நூலை முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழின் கார்டியன் வாசகர்களின் தேர்வு
‘தி கார்டியன்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களைத் தங்களின் வாசகர்களைக் கொண்டு தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கம் போல் இந்த ஆண்டு பட்டியலிலும் நாவல்களே பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த ஆண்டு சிறந்த 10 புத்தகங்களின் பட்டியலில் முதல் ஐந்து புத்தகங்கள் (நாவல்கள்), இங்கே:
1. ஹான்யா யானகிஹரவின் ‘எ லிட்டில் லைஃப்’ நாவல் (A Little Life - Hanya Yanagihara), 2. எலினா ஃபெரன்டேவின் ‘த ஸ்டோரி ஆஃப் எ லாஸ்ட் சைல்டு’ நாவல் (The Story of a Lost Child - Elena Ferrante), 3. கேட் அட்கின்சனின் ‘எ காட் இன் ரூய்ன்ஸ்’ நாவல், (A God in Ruins - Kate Atkinson) 4. மேன் புக்கர் விருது பெற்ற மார்லோன் ஜேமின் ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்ஸ்’ (A Brief History of Seven Killings - Marlon Jame). இந்த நாவல் பாப் மார்லியைக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பற்றியது. 5. ஆன் டைலரின் ‘ஏ ஸ்பூல் ஆஃப் ப்ளூ த்ரெட்’ (A Spool of Blue Thread - Anne Tyler).
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago