அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக மூத்த ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததுள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க தயாராகி வருவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. அலெக்ஸிக்கு கடந்த வருடம் உடல் நலம் பாதித்தத்தில் ரஷ்யாவின் பங்கு எதுவும் இல்லை. எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்.
மேலும் இது ரஷ்யாவின் உள் நாட்டு விவகாரம் இதில் வெளி நாடுகள் தலையிட வேண்டாம் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
» குன்னூரில் பழங்குடியினருக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிய அதிமுகவினர்; 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்
» கூட்டணியில் இழுபறி வெளியேறுகிறதா காங்கிரஸ்?- நாளை மாவட்ட தலைவர்களுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை
இந்த நிலையில் ரஷ்ய அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் விசா போன்றவையும் அடங்கும்.
நடந்தது என்ன?
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago