நூல்நோக்கு: வேற்றுப்புலத்துக் கதைகள்

By சுப்பிரமணி இரமேஷ்

காஷ்மீரியன்
தேவராஜ் விட்டலன்
பிறை பதிப்பகம்
கொளத்தூர்,
சென்னை–14.
தொடர்புக்கு:
98435 14251
விலை: ரூ.110

இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் தேவராஜ் விட்டலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஷ்மீரியன்’. இந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்குப் புலம்பெயரும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகிறார். இந்தப் பணியினூடாகப் பெற்ற அனுபவங்களும், சொந்த நிலத்தின் வேர் அறுந்த துயரங்களும் இந்தத் தொகுப்பில் புனைவுகளாக உருப்பெற்றுள்ளன. நகர வாழ்க்கை மீது தொடர்ந்து உருவாகிக்கொண்டே வரும் மிகை வெளிச்சத்துக்குப் பலியாகும் இடங்களையும், நகரம் தரும் நவீன வாழ்க்கையின் போதாமைகளில் வெளிப்படும் கிராமத்தின் உன்னதங்களையும் இவரது கதைகள் பேசுகின்றன. அடுத்த தலைமுறை மீது நம்பிக்கை இழந்து, அவர்களுக்காக மெனக்கெடும் தற்போதைய தலைமுறையின் பதற்றம் நுட்பமாக வெளிப்படுகிறது. காஷ்மீரைப் பற்றி யார் எழுதினாலும் தொடர் அலைவுறுதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் இனத்தின் துயரத்தை எழுதாமல் கடந்துசெல்ல முடியாது. தென்புலத்தைச் சார்ந்த ராணுவ வீரனுக்கும் போர்ட்டராகப் பணியாற்றும் காஷ்மீரியன் ஒருவனுக்கும் இடையே உருவாகும் ஆத்மார்த்தமான உறவைப் பேசும் கதை குறிப்பிடத்தக்கது.

இந்திய நிலப்பரப்பின் வெவ்வேறு நிறங்களை உள்ளடக்கிய கலவையான சிறுகதைகள் இவை. தமிழகப் பரப்பிலிருந்து வேற்றுப்புலம் சார்ந்து எழுதக் கூடிய படைப்பாளர்கள் குறைவுதான். அந்த இடத்தில் தேவராஜ் விட்டலன் தொடர்ந்து இயங்கும்போது அவரது புனைவுகளுக்கான இடம் விரிவடையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்