பழங்குடி வாழ்க்கைக்கு உள்ளே ...

By செய்திப்பிரிவு

பழங்குடிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகின் இரண்டாவது நாடு. ஆப்பிரிக்க கண்டத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மக்கள்தொகையில் எட்டு சதவீதத்துக்கும் மேலே பழங்குடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரையறைகள் ஒன்றும் அவ்வளவு அக்கறையுடன் கூடிய துல்லியமானவையாக இல்லை. அவர்களுக்கான திட்டங்களோ சட்டங்களோ போதுமான அளவுக்கு அமலாவதில்லை.

இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களும் தமிழகத்தில் 36 வகையான பழங்குடி இனங்களும் உள்ளன. இந்த மக்களை ஆழமாகப் புரிந்துகொள்வது அவர்களை மற்றப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மட்டத்துக்கு உயர்த்துவதற்கு மிகவும் அவசியமானது. அத்தகைய புரிதலுக்கான ஒரு பங்களிப்பாகச் சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள கெத்தேசால் கிராமத்தில் உள்ள சோளகர் இன மக்களைப் பற்றி அ. பகத்சிங் எழுதியுள்ளார்.

தமிழ், கன்னடம் இரண்டின் கலப்பாக உள்ள அவர்களின் மொழி, ஐந்து குலங்களாகப் பிரிந்துள்ள அவர்களது இன வாழ்வு, சடங்குகள், வழிபாடு, உறவுகள் என விரிவாக அலசியுள்ளார்.

அவர்கள் தங்களுக்கான அடையாளச் சான்று கிடைக்காமல் அலைவது, பழங்குடிப் பள்ளிகளின் சீரழிந்த நிலை என அவர்களின் பிரச்சினைகளையும் விவாதித்துள்ளார். நமது சமூகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புவோர்க்கு இந்த நூல் சிறு விருந்து.

- த. நீதிராஜன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

15 hours ago

இலக்கியம்

15 hours ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

மேலும்